இன்று முதல் நாடாளுமன்ற அவை நடவடிக்கைகள் புதிய நாடாளுமன்றக் கட்டித்தில் நடைபெற உள்ளது. இதுவரை செயல்பட்டு வந்த நாடாளுமன்றக் கட்டிடம் அரசியலமைப்புச் சட்டத்தை ஏற்றுக்கொண்டது உள்ளிட்ட பல்வேறு வரலாற்று நிகழ்வுகளின் கம்பீரமான சாட்சியாக திகழப் போகிறது.

பிரிட்டிஷ் கட்டிடக் கலைஞர்களான சர் எட்வின் லுட்யென்ஸ் மற்றும் ஹெர்பர்ட் பேக்கர் ஆகியோரால் வடிவமைக்கப்பட்ட பழைய நாடாளுமன்றக் கட்டிடம், இந்தியாவின் சுதந்திரப் போராட்டத்தை மட்டுமல்ல, அதன் பிறகான நாட்டின் வளர்ச்சிக்கும் சாட்சியாக திகழ்கிறது. ஆனால் தற்போதைய காலத்திற்கு ஏற்ப இடவசதியும், நவீனமும் இல்லாதால் நவீன வசதிகளுடன் புதிய நாடாளுமன்றக் கட்டிடம் கட்ட தீர்மானிக்கப்பட்டது. அதன்படி கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இந்த புதிய திட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. கொரோனா காலத்திலும் கூட இதற்கு மட்டும் சிறப்பு அனுமதி தரப்பட்டு கட்டுமானப் பணிகள் படுவேகமாக நடைபெற்றது. சுமார் 60,000 தொழிலாளர்களின் இரண்டு வருட கடும் உழைப்பால் இந்த புதிய கட்டிடம் தயாரானது. இதனைக் கடந்த மே மாதம் பிரதமர் மோடி நாட்டிற்கு அர்ப்பணித்தார்.

புதிய நாடாளுமன்றக் கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டு பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டாலும், பழைய நாடாளுமன்றக் கட்டிடம் இடிக்கப்படாது என மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்தியாவின் தொல்லியல் சின்னமாக திகழும் இந்தக் கட்டிடம் இடிக்கப்படாது என்றும், மாற்று பயன்பாட்டிற்கு பயன்படுத்தப்படும் என்றும் கடந்த 2021 ஆம் ஆண்டு அப்போதைய நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் புரி உறுதியளித்திருந்தார். பழைய நாடாளுமன்றக் கட்டிடத்தில் இருக்கும் பொருட்கள் புதிய நாடாளுமன்றக் கட்டிடத்திற்கு மாற்றப்பட உள்ளன. இதனால் அந்த பழைய கட்டிடம் இன்னும் இட வசதி உள்ள கட்டிடமாக மாறும். பிறகு இந்த பழைய நாடாளுமன்றக் கட்டிடத்தை அருங்காட்சியகமாக மாற்றும் திட்டமும் மத்திய அரசிடம் உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதையும் படிங்க: 1000 ரூபாய் வச்சுகிட்டு என்ன முதலீடு செய்ய முடியும்னு தயங்காதீங்க… உங்களுக்காகவே சூப்பரான சேமிப்பு திட்டங்கள் இருக்கு!

புதிய பிரமாண்டமான நடாளுமன்றக் கட்டிடத்தின் மக்களவையில்  ஒரே நேர்த்தில் 888 உறுப்பினர்களும், ராஜ்யசபாவில் 300 உறுப்பினர்களும் அமரலாம். இரு அவைகளின் கூட்டுக் கூட்டம் நடத்துவதற்கு வசதியாக மக்களவையில் ஒரே நேரத்தில்  1,280 எம்.பி.க்கள் அமரும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

முக்கோண வடிவிலான இந்த நான்கு மாடி கட்டிடம் 64,500 சதுர மீட்டர் பரப்பளவைக் கொண்டுள்ளது. இது கியான் துவார், சக்தி த்வார் மற்றும் கர்ம துவார்  என மூன்று முக்கிய நுழைவாயில்களைக் கொண்டுள்ளது. அதே போல் விஐபிகள், எம்பிக்கள் மற்றும் பார்வையாளர்களுக்கு தனித்தனி நுழைவாயில்கள் உள்ளன. இந்த புதிய கட்டிடத்தில் தான் இனி அலுவல்கள் நடைபெற உள்ளன.

உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 46, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.

Source link

By Admin S

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: