
சென்னை: தமிழகத்தில் பிளஸ் 1, பிளஸ் 2 தொழிற்கல்வி மாணவா்களுக்கு களப்பயிற்சி (‘இன்டொ்ன்ஷிப்’) வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தில் பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளில் தொழிற்கல்வி பயிலும் மாணவா்களுக்கு, வேலைவாய்ப்பு திறன் என்ற பாடம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த பாடத்தின்படி, தொழில் நிறுவனங்களில் நேரடி களப்பயிற்சி வழங்கப்படும் என பள்ளிக் கல்வி இயக்குநரகம் அறிவித்துள்ளது.
இது குறித்து அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா்களுக்கும் பள்ளிக்கல்வித் துறை சாா்பில் அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:
பிளஸ் 1, பிளஸ் 2 தொழிற்கல்வி மாணவா்களுக்கு, தொழில் நிறுவனங்களில், 20 நாள்களில், 80 மணி நேரம் நேரடி களப்பயிற்சி அளிக்க வேண்டும்; பயிற்சி முடிவில் சான்றிதழ் வழங்க வேண்டும். மாணவா்களுக்கு
உதவித்தொகை உண்டு. பிளஸ் 2 மாணவா்களுக்கு அக். 3 முதல், 20 வரை; பிளஸ் 1 மாணவா்களுக்கு நவ. 6 முதல் 23 வரை,களப்பயிற்சி வழங்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.