ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாடும் இந்திய அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஆசிய கோப்பை தொடரை வென்று இந்திய அணி சூப்பர் ஃபார்மில் உள்ளது. அடுத்த மாதம் 5ஆம் தேதி உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் ஆரம்பம் ஆகவுள்ள நிலையில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான ஒருநாள் கிரிக்கெட் தொடர் வரும் 22, 24 மற்றும் 27 ஆகிய தேதிகளில் இந்தியாவில் நடைபெறவுள்ளது.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கிரிக்கெட் தொடரை இந்திய அணி கைப்பற்றினால் கூடுதல் உத்வேகத்துடன் உலகக்கோப்பையில் களம் காணும். இதனால் இந்த தொடர் இந்தியாவுக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. ஆஸ்திரேலிய அணிக்கும், இந்தியா போன்ற வலிமையான அணியுடன் மோதவிருப்பதால் அந்நாட்டு ரசிகர்களும் இந்த போட்டியை எதிர்பார்த்துள்ளனர். இதற்கிடையே வீரர்களுக்கு ஓய்வே அளிக்காமல் தொடர்ந்து பிசிசிஐ விளையாட வைத்துக் கொண்டிருப்பதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன.
இந்நிலையில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கிரிக்கெட் தொடரில் விளையாடும் இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. 3 போட்டிகள் கொண்ட இந்த தொடரில் முதல் 2 போட்டிகளுக்கு கே.எல். ராகுல் கேப்டனாக செயல்படுவார்.
முதல் 2 போட்டிகளுக்கான இந்திய அணி – கே.எல். ராகுல் (கேப்டன் – விக்கெட் கீப்பர்), ரவீந்திர ஜடேஜா (துணை கேப்டன்), ருதுராஜ் கெய்க்வாட், ஷுப்மான் கில், ஷ்ரேயாஸ் ஐயர், சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா, இஷான் கிஷன் (விக்கெட் கீப்பர்), ஷர்துல் தாக்கூர், வாஷிங்டன் சுந்தர், அஷ்வின், பும்ரா, முகம்மது ஷமி, முகமது சிராஜ், பிரசித் கிருஷ்ணா.
கடைசி போட்டிக்கான இந்திய அணி- ரோஹித் சர்மா (கேப்டன்), ஹர்திக் பாண்டியா (துணை கேப்டன்), ஷுப்மன் கில், விராட் கோலி, ஸ்ரேயாஸ் ஐயர், சூர்யகுமார் யாதவ், கேஎல் ராகுல் (விக்கெட் கீப்பர்), இஷான் கிஷன் (விக்கெட் கீப்பர்), ரவீந்திர ஜடேஜா, ஷர்துல் தாக்கூர், அக்சர் படேல் (உடல் தகுதியை பொறுத்து) ), வாஷிங்டன் சுந்தர், குல்தீப் யாதவ், அஷ்வின், ஜஸ்பிரித் பும்ரா, முகமது ஷமி, முகமது சிராஜ்
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 46, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.