இந்தியக் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனாகவும் தற்போதைய ஐபிஎல் போட்டிகளுக்காக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாகவும் இருந்துவரும் மகேந்திர சிங் தோனி ஒரு பைக் பிரியர் என்பது ரசிகர்களுக்குத் தெரிந்ததுதான். இந்நிலையில் அவருடைய பைக் மற்றும் கார் சேகரிப்பு குறித்த வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகப் பரவி வருகிறது.

தோனி தனக்கு சொந்தமான ராஞ்சி பண்ணை வீட்டில் வசித்துவருவதும் அங்கு தன்னுடைய கார் மற்றும் பைக்குகளுக்காக தனி கேரஜ் வைத்திருப்பதும் நாம் அறிந்ததுதான். கடந்த ஆண்டு தோனியின் கலெக்ஷ்ன் குறித்த ஒரு கண்காட்சியும் வைக்கப்பட்டு இருந்தது. ஆனால் தற்போது முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் வெங்கடேஷ் பிரசாத் மற்றும் பிசிசிஐ தேர்வாளரும் முன்னாள் சுழற்பந்து வீச்சாளருமான சுனில் ஜோஷி ஆகிய இருவரும் தோனியை சந்திப்பதற்காக ராஞ்சி சென்றுள்ளனர்.

அவர்கள் தோனியின் கலெக்ஷனை பார்வையிட்டபோது எடுத்துக்கொண்ட வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தோனியிடம் விண்டேஜ் கார்கள் முதற்கொண்டு தற்போதைய சூப்பர் கார்கள் வரை பல விலையுயர்ந்த கார்கள் இருக்கின்றன. அதேபோல அவர் பைக் சேகரிப்பிலும் அலாதியாக பிரியம் உள்ளவர். அந்த வகையில் உற்பத்தியிலேயே இல்லாத பல பழமையான பைக்குகளை அவர் வாங்கி குவித்திருக்கிறார்.

அதில் கிட்டத்தட்ட தோனியிடம் 70 க்கும் மேற்பட்ட பைக்குகள் இருப்பதாகக் கூறப்படுகிறது. குறிப்பாக கவாஸாகி நிஞ்சா, டுகாட்டி, ஹார்லி டேவிட்சன் போன்றவை அவரைப் பெரிதும் ஈர்த்தவை.

மேலும் 15 க்கும் மேற்பட்ட சொகுசு கார்களையும் பழங்கால கார்களையும் அவர் வைத்துள்ளர். Kia EV6. ஹம்மர், லேண்ட் ரோவர், ஆர்க்யூ7, மிட்சுபிஷி பஜேரோ, ஜிஎம்சி சியரா பிக் அப் டிரக், போர்ஷே பாக்ஸ்டர், ஃபெராரி 500 ஜிடிஓ, மஹிந்திரா ஸ்கார்பியோ, ரோல்ஸ் ராய்ஸ் சில்வர் ஷேடே சீரிஸ் மற்றும் அண்மையில் வாங்கிய ஃபயர்பேர்ட் டிரான்ஸ் வரை அவருடைய சேகரிப்பில் வைக்கப்பட்டு இருக்கின்றன.

இதுகுறித்து பேசிய முன்னாள் இந்திய வீரர் வெங்கடேஷ் பிரசாத் அற்புதமான மனிதர் எம்.எஸ்.தோனி. அற்புத சேகரிப்பை வைத்திருக்கிறார். சிறந்த சாதனையாளர் அவர். இந்த வீடியோவில் நீங்கள் பார்ப்பது அவரது ராஞ்சி வீட்டில் அவர் சேகரித்து வைத்துள்ள கார்கள் மற்றும் பைக்குகள் தான். அவரது வாகன மோகத்தை கண்டு வியப்படைகிறேன். பைத்தியக்காரத்தனமான ஆசைகளில் ஒன்று என்று அவர் குறிப்பிட்டு இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் தோனி சேகரிப்பில் இருக்கும் கார்கள் மற்றும் பைக்குகளை குறித்த வீடியோ ரசிகர்களிடையே வரவேற்பை பெற்று வைரலாகி வருகிறது.

Source link

By Admin S

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: