ஆசிய கோப்பை தொடரில் மழை காரணமாக இன்று நடைபெற்ற இந்தியா – பாகிஸ்தான் இடையிலான ஆட்டம் நாளைக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்த மேட்சில் முதலில் பேட்டிங் செய்து வரும் இந்திய அணி 24.1 ஓவரில் 2 விக்கெட் இழப்புக்கு 147 ரன்கள் எடுத்திருந்தது. விராட் கோலி 8 ரன்னுடனும், கே.எல். ராகுல் 17 ரன்னுடனும் களத்தில் இருந்தனர். இதிலிருந்து நாளை ஆட்டம் மீண்டும் தொடங்கவுள்ளது.
டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பவுலிங்கை தேர்வு செய்தது. இதையடுத்து இந்திய அணியின் தொடக்க வீரர்களாக களம் இறங்கிய ரோஹித் சர்மா – சுப்மன் கில் சிறப்பான தொடக்கத்தை கொடுத்தனர்.
#INDvsPAK | India vs Pakistan match in the Asia Cup called off for the day due to rain, to resume tomorrow pic.twitter.com/QA7XsSoyXl
— ANI (@ANI) September 10, 2023
ரோஹித் சர்மா 56 ரன்களும், சுப்மன் கில் 58 ரன்களும் எடுத்து இருவரும் முதல் விக்கெட்டிற்கு 121 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். இந்திய அணி 24.1 ஓவரில் 2 விக்கெட் இழப்புக்கு 147 ரன்கள் எடுத்திருந்தபோது மழை குறுக்கிட்டதால் ஆட்டம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. அப்போது விராட் கோலி 8 ரன்னுடனும், கே.எல்.ராகுல் 17 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.
இதன்பின்னர் மழை விளையாட முடியாத அளவுக்கு பெய்ததால் ஆட்டம் நாளை தொடரும் என்று நடுவர்கள் அறிவித்துள்ளனர். இந்தியா – பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான லீக் சுற்றில் மழை பெய்து ஆட்டம் நிறுத்தப்பட்டது. தற்போதும் மழை குறுக்கிட்டு வருவதால் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
இதையும் படிங்க – ஒருநாள் போட்டிகளுக்கான ஐசிசி தரவரிசை!! முதலிடத்திற்கு ஆஸ்திரேலிய அணி முன்னேற்றம்
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் கடந்த ஆகஸ்ட் 30 ஆம் தேதி தொடங்கியது. இந்த தொடரில் 6 அணிகள் பங்கேற்றுள்ளன. இதில், இரண்டு பிரிவுகளில் முதல் 2 இடங்களை பிடித்த இந்தியா, பாகிஸ்தான், இலங்கை மற்றும் வங்கதேசம் சூப்பர் 4 சுற்றுக்கு முன்னேறின. தற்போது சூப்பர் 4 சுற்று ஆட்டங்கள் நடைபெற்று வருகிறது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 46, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.