சயாமி கேர், ஷபானா ஆஸ்மி, அங்கத் பேடி உள்ளிட்ட பலர் நடித்திருக்கின்ற இப்படத்திற்கு அமித் திரிவேதி இசையமைத்திருக்கிறார். ஒரு கையை இழந்த நிலையில் தனது முயற்சியால் கிரிக்கெட் விளையாட்டில் சாதிக்கும் பெண் ஒருவரின் கதையைப் படமாக இயக்கியிருக்கிறார் பால்கி. இப்படத்தில் கிரிக்கெட் பயிற்சியாளராக அபிஷேக் பச்சனும், கிரிக்கெட் டீமின் உரிமையாளராக அமிதாப் பச்சனும் நடித்திருக்கின்றனர்.
படத்தின் புரோமோஷன் நிகழ்ச்சி ஒன்றில் தன் பெற்றோரை விட்டுத் தனியாக வாழ்வதை நினைத்துக்கூட பார்க்கமுடியாது என்று அபிஷேக் பச்சன் கூறியிருக்கிறார். நிகழ்ச்சியில் அவரிடம் இந்திய இளைஞர்கள் தங்கள் பெற்றோருடன் ஒரே வீட்டில் வாழும் பொதுவான நடைமுறை குறித்து கேள்வி எழுப்பப்பட்டிருக்கிறது. அதற்கு பதிலளித்த அபிஷேக் பச்சன், “சமூகம், கலாசாரம், மரபுகள் என அனைத்தும் மாறி வருகின்றன. இன்றைய பரபரப்பு நிறைந்த வாழ்க்கையில் மும்பை போன்ற நகரத்தில் வசிக்கிறீர்கள் என்றால் குடும்பத்துடன் செலவிட குறைவான நேரமே உள்ளது.