இதே நாடாளுமன்றத்தில், `பிரிவு 370, ஜிஎஸ்டி, ஒரே பதவி ஒரே ஓய்வூதியம்’ போன்ற பல முக்கிய முடிவுகளை நாங்கள் எடுத்திருக்கிறோம். அதோடு, மன்மோகன் சிங் ஆட்சிக்காலத்தில் அரங்கேறிய `ஓட்டுக்கு பணம்’ என்ற ஊழலை இந்த சபை பார்த்திருக்கிறது. இதுமட்டுமல்லாமல், வெறும் நான்கு எம்.பி-க்களைக் கொண்ட கட்சி ஆட்சியில் அமர்வதையும், 100-க்கு மேற்பட்ட எம்.பி-க்களைக் கொண்ட கட்சி எதிர்க்கட்சியாக அமர்வதையும் இந்த நாடாளுமன்றம் பார்த்திருக்கிறது.

ஜார்க்கண்ட், சத்தீஸ்கர், உத்தரகாண்ட் போன்ற மாநிலங்கள் உருவாக்கப்பட்டபோது எங்கும் கொண்டாட்டங்கள். ஆனால், தெலங்கானா மாநில உருவாக்கம் கசப்பான நினைவுகளை விட்டுச் சென்றது. கடந்த காலத்தை, எதிர்காலத்துடன் இணைக்கும் தருணத்தின் ஒரு பகுதியாக இருப்பதால் நாம் அதிர்ஷ்டசாலிகள். புதிய நாடாளுமன்றக் கட்டடத்துக்குள் நுழையும்போது, புதிய நம்பிக்கையுடன் அங்கு செல்வோம் என்று நான் உறுதியாக நம்புகிறேன்” என்று கூறினார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/3PaAEiY
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/3PaAEiY