ஆசிய கோப்பையின் போது வீரர்களுக்கான ஊதியம் அந்தந்த அணிகளுக்கான போட்டிகளில் அவர்கள் பங்கேற்பதை பொறுத்தது என்பது உங்களுக்கு தெரியுமா? ஒரு கிரிக்கெட் வீரருக்கான fee structure என்பது அவர் பங்கேற்கும் போட்டிகளின் எண்ணிக்கை மற்றும் அவரது அணி விளையாடும் ஒட்டுமொத்த போட்டிகள் ஆகிய இரண்டையும் அடிப்படையாக கொண்டது. அதாவது ஒரு அணி எத்தனை போட்டிகளில் விளையாடியது, அதில் ஒரு வீரர் எத்தனை போட்டிகளில் விளையாடினார் என்பதை பொறுத்தே ஆசிய கோப்பையில் பங்கேற்கும் ஒரு வீரரின் போட்டி கட்டணம் இருக்கும்.
ஒருவேளை ஒரு ஆட்டத்தில் ஒரு வீரர் களமிறங்கவில்லை என்றால், அந்த குறிப்பிட்ட போட்டிக்கான நிதியை அவர் பெற மாட்டார். இந்திய கிரிக்கெட் அணியை பொறுத்தவரை ஆசிய கோப்பையின் போது ஒரு வீரர் குறைந்தது 5 போட்டிகளில் பங்கேற்க வேண்டும் என்பது ஒரு prerequisite- இருக்கிறது. ஆசிய கோப்பை தொடரில் இந்தியா குறைந்தது 5 போட்டிகளில் விளையாடும். இறுதி போட்டியை தவிர அனைத்து போட்டிகளிலும் விளையாடும் இந்திய வீரர்கள் குறைந்தபட்சம் ரூ.30 லட்சம் ஊதியமாகபெறுவார்கள். தவிர இறுதி போட்டியில் இடம்பெறுபவர்களின் வருமானம் கணிசமாக அதிகரிக்கும். மேலே நாம் பார்த்தது tournament-based கட்டணம் பற்றியது.
போட்டி அடிப்படையிலான இந்த கட்டணங்களை தவிர, பிசிசிஐ ஆண்கள் கிரிக்கெட் வீரர்களை A+, A, B, மற்றும் C என மொத்தம் 4 கிரேடுகளாக பிரித்து உள்ளது. இந்திய கிரிக்கெட் வீரர்கள் தங்கள் Contractual Agreements-களின் ஒரு பகுதியாக தங்கள் வகைப்படுத்தப்பட்டிருக்கும் கிரேடுகளுக்கு ஏற்ப வருடாந்திர சம்பளத்தையும் பெறுகின்றனர். ஹையஸ்ட் கிரேடான A+-ல் இருக்கும் ரோஹித் ஷர்மா, விராட் கோலி, ஜஸ்பிரித் பும்ரா மற்றும் ரவீந்திர ஜடேஜா போன்ற முன்னணி வீரர்கள் ஆண்டுக்கு சுமார் 7 கோடி ரூபாய் வருடாந்திர சம்பளம் பெறுகின்றனர். அதே நேரம் இதற்கடுத்து இருக்கும் A கிரேடில் இருக்கும் வீரர்களான ஹர்திக் பாண்டியா, ஆர் அஷ்வின், முகமது ஷமி, ரிஷப் பந்த் மற்றும் அக்ஷர் படேல் ஆகியோர் ஆண்டுக்கு 5 கோடி ரூபாய் வருடாந்திர ஊதியம் பெறுகிறார்கள்.
B கிரேடில் இருக்கும் புஜாரா, கேஎல் ராகுல், ஷ்ரேயாஸ் ஐயர், முகமது சிராஜ், சூர்யகுமார் யாதவ் மற்றும் சுப்மன் கில் போன்ற வீரர்கள் ஆண்டு சம்பளமாக ரூ.3 கோடி பெறுகிறார்கள். கடைசியாக இருக்கும் C கிரேட் கிரிக்கெட் வீரர்களான உமேஷ் யாதவ், ஷிகர் தவான், ஷர்துல் தாக்கூர், இஷான் கிஷன், தீபக் ஹூடா, யுஸ்வேந்திர சாஹல் உள்ளிட்ட வீரர்கள் ஆண்டுக்கு ரூ.1 கோடியை சம்பளமாக பெறுகிறார்கள். மேற்கண்ட இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கான ஒப்பந்தங்கள் வரும் செப்டம்பர் 23-ஆம் தேதி முடிவடையவுள்ளது.
Also Read : ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடர்… இந்திய அணி அறிவிப்பு
வீரர்கள் தங்கள் கிரேடுகளின் அடிப்படையில் வருடாந்திர ஊதியம் பெறும் அதே நேரம் டெஸ்ட் போட்டிகள், டி20 மற்றும் ஒரு நாள் ஃபார்மெட்களில் பங்கேற்பதற்கான போட்டி கட்டணமாக (Match Fee) கிரேடுகளை கணக்கில் கொள்ளாமல் வீரர்களுக்கு டெஸ்ட் போட்டிகளுக்கு ரூ.15 லட்சமும், ஒரு நாள் போட்டிகளுக்கு ரூ.6 லட்சமும், டி20 போட்டிகளுக்கு ரூ.3 லட்சமும் வழங்கப்படுகிறது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 46, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.