இது குறித்துப் பேசிய அவர், “ஒரு அறையில் உட்கார்ந்து இருக்கும் மனிதர்கள் எடுத்த இது போன்ற பயங்கரமான முடிவுகளே நாம் இப்போது வாழ்ந்து கொண்டிருக்கும் உலகத்தை வரையறுத்து இருக்கிறது. என்ன ஒரு வியப்பான நிகழ்வு. அந்த இடத்திற்கு நான் பார்வையாளர்களைக் கொண்டு செல்ல வேண்டும் நினைத்தேன்.
இந்தப் படத்தில் ‘CGI’ (கிராபிக்ஸ்) காட்சிகளே இல்லை. ஜே.ராபர்ட் ஒப்பன்ஹெய்மரின் அணுகுண்டு வெடிப்பு சோதனையை மீட்டுருவாக்கம் செய்த காட்சியிலும் கூட கிராஃபிக்ஸ் பயன்படுத்தப்படவில்லை” என்று தெரிவித்திருக்கிறார்.

இதன்படி, அணுகுண்டு காட்சிகளுக்கு வேறு ஏதேனும் கேமரா டெக்னிக் அல்லது ஸ்பெஷல் எஃபெக்ட்ஸ் பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என்று தெரிகிறது.
இதற்கு முன்னர், படத்தின் முதல் பிரிவியூ காட்சி கடந்த மாதம் நடைபெற்றது. அப்போது பேசியவர், “படத்தை மற்றொரு இயக்குநரிடம் காட்டியபோது அவர் இது ஹாரர் படம் போல உள்ளது என்றார். படம் பார்த்தவர்களில் பலர் ஒரு பேரழிவின் பாதிப்புடனே வெளியேறினர்” என்று தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.