`என் உயிர்த் தோழன்' பாபு: “பட்ட அவஸ்தையைக் கண்கொண்டு பார்க்க முடியவில்லை"- உடைந்து அழுத பாரதிராஜா

Estimated read time 1 min read

‘ என் உயிர்த் தோழன்’ பாபு நெடுநாள் நோய்வாய்ப்பட்டிருந்த நிலையில் இன்று உயிரிழந்தார்.

இயக்குநர் பாரதிராஜாவுக்கு பிடித்தமான உதவி இயக்குநராக இருந்தார். படப்பிடிப்பின்போது உயரத்திலிருந்து குதிக்கும் காட்சியில் டூப் போடுவதற்கு மறுப்பு தெரிவித்து தானே குதித்தார். அதனால் முதுகெலும்பில் அடிபட்டு, பாதிக்கப்பட்டு கடந்த முப்பது வருடங்களாக படுத்த படுக்கையாக இருந்தார். என் உயிர் தோழனில் அவரது பாத்திரப்படைப்பு மிகவும் முக்கியமானது. பரவலாக எங்கும் கவனத்திற்கு உள்ளாகி, அவர் வெளிச்சத்திற்கு வந்தார். பாரதிராஜாவும் தன் பெருமையான அறிமுகமாக பாபுவை குறிப்பிட்டு எங்கும் பேசுவார்.

’என் உயிர்த் தோழன்’ பாபு

பாபு அடிபட்டு மருத்துவமனையில் இருந்தபோது நடிகர் விஜய், சத்யராஜ் உள்ளிட்டோர் பண உதவி செய்தார்கள். விஜயகாந்த் பெருமளவில் உதவினார். அவர் சிகிச்சையில் இருந்தும் போதிய முன்னேற்றம் இல்லாததால், அவரை சாந்தோம் வீட்டுக்குக் கொண்டு சென்றார்கள். மிகச்சிறிய காலம் அவரால் தட்டுத்தடுமாறி நடமாட முடிந்தது. அந்த நடமாட்டமும் முடிவுக்கு வந்து, மறுபடியும் படுத்த படுக்கையாகி விட்டார்.

பாரதிராஜாவும் அவரை அடிக்கடி வந்து நலம் விசாரித்து உதவிகள் செய்தார். தன் உதவியாளர் மறைவால் வேதனையில் இருந்த இயக்குநர் பாரதிராஜாவிடம் பேசினோம். ” என்னிடம் பாபு வந்து சேரும்போது அவனது திறமை என்னை ஆச்சர்யப்படுத்தியது. அவன் பெரிய டைரக்டர் ஆகிவிடுவான் என்று நினைத்து இருந்தேன். என் உயிர்த் தோழனுக்காக முடிவு செய்த புதுமுகத்தின் நடிப்பு சரியாக வராதபோது , அவனுக்கு நடிப்பு சொல்லிக் கொடுத்த பாபு பிரமாதமாக நடித்தே காண்பித்தான். உடனே ஐடியா வந்து அவனையே ஹீரோ ஆக்கிட்டேன். பாபு பதறிவிட்டான். பிறகு உற்சாகமாக நடித்தான்.

’என் உயிர்த் தோழன்’ பாபு

பிரமாதமாக நடித்தான். பெரிய அளவில் இயக்குநராக வருவான் என்று நினைத்தவன் நடிகன் ஆகிவிட்டது கண்டு எனக்கு சந்தோஷம். அவன் நாலைந்து படங்களில் ஹீரோவாக நடித்தபோது அவன் வளர்ச்சியை பார்த்துக்கொண்டே இருந்தேன். விபத்து நடந்தபிறகு அவனை அடிக்கடி சந்தித்தேன். அவன் பட்ட அவஸ்தையை கண்கொண்டு பார்க்க முடியவில்லை. அவன் நல்லபடியாக கடவுள் அருளால் திரும்பி வந்துவிடுவான் என்று நம்பினேன். கடவுள் அவன் விஷயத்தில் என்னை கைவிட்டு விட்டார்.

எப்படியிருந்தாலும் அவஸ்தைகளிலிருந்து அவன் விடுதலை ஆகிவிட்டான். ஆனாலும் என் பாபுவை என்னால் மறக்க முடியவில்லை. என் அறிமுகத்தில் பாபுவை முக்கியமாகக் கருதுகிறேன்.

’என் உயிர்த் தோழன்’ பாபு

எங்கிருந்தாலும் அவன் ஆத்மா சாந்தியடைய வேண்டுகிறேன். `என் உயிர் தோழன்’ அவனது சிறந்த நடிப்பிற்கான அடையாளமாக தமிழ் சினிமாவில் இருக்கும் என்றார் பாரதிராஜா. தளர்ந்த குரலில் அவரது இயலாமையும், வேதனையும் தெரிந்தது.

Source link

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours