அமுதாவும் அன்னலட்சுமியும் சீரியல் அப்டேட்: தொலைக்காட்சி சீரியல்கள் நம் பலரது வாழ்வோடு பின்னிப்பிணைந்து இருக்கும் அம்சமாக உள்ளன. தினசரி தொடராக வரும் டிவி சீரியல்களுக்கும், அவற்றில் நடிக்கும் நடிகர், நடிகைகளுக்கும் சினிமா பிரபலங்களையே மிஞ்சும் அளவுக்கு கூட ரசிகர் பட்டாளம் உள்ளது. அப்படி பல ரசிகர்கள் விரும்பி பார்க்கும் சீரியல்களில் ஒன்றுதான் ‘அமுதாவும் அன்னலட்சுமியும்’ சீரியல்.

அமுதாவும் அன்னலட்சுமியும்: இன்றைய எபிசோட்

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் அமுதாவும் அன்னலட்சுமியும். இந்த சீரியலில் நேற்றைய எபிசோடில் வீட்டுக்கு வந்த மாயாவின் உண்மை முகத்தை வெளியே கொண்டு வர அமுதா சில முயற்சிகளை மேற்கொண்ட நிலையில் இன்று நடக்கப் போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க. 

மேலும் படிக்க | ‘மார்க் ஆண்டனி’ வசூல் விவரம்: வெளியான நான்கே நாட்களில் 50 கோடி கலெக்ஷன்

அதாவது, அன்னலட்சுமி குழந்தையை தொட்டிலில் போட்டு உருட்ட, குழந்தை அழுகையை நிப்பாட்டுகிறது. பிரியா பேரனுக்கு ஒண்ணுன்னா உடனே பாட்டிக்கு தாங்க முடியலை என சொல்ல, அன்னலட்சுமி என் மருமக சொன்னதுக்காக தான் நான் இதை பண்ணுனேன் என சொல்கிறாள். 

அடுத்ததாக அமுதா பிரியாவின் பிரண்ட் கல்பனாவின் வீட்டை தேடி கண்டுபிடித்து கல்பனாவிடம் செந்திலின் மனைவி என அறிமுகப்படுத்திக் கொள்கிறாள். அமுதா கல்பனாவிடம் நடந்தவற்றை சொல்ல கல்பனா ஆச்சரியமாக பிரியாவா இப்படியெல்லாம் பண்றா என கேட்கிறார். 

செந்திலை ஒரு தலையா பிரியா தான் காதலிச்சா, செந்தில் மேல தப்பு இல்லை, இதுல வேற யாரோ சம்பந்தப்பட்டு இருக்காங்க என சொல்கிறாள். மேலும் பிரியாவை இன்னொருவன் ஒரு தலையாக காதலித்ததாக சொல்லி, அவனை விசாரித்தால் ஏதாவது உண்மை வெளிவரும் என சொல்கிறாள். 

அடுத்ததாக அமுதா வீட்டுக்கு வர, பிரியா பிள்ளைக்கு பேர் வைக்கும் பங்ஷனுக்கு ஏற்பாடு செய்திருக்க அங்கு பழனி நிற்க, அமுதா எதுக்கு அவரை உள்ள விட்டீங்க என கோபமாக சொல்ல, பிரியா எனக்கு இந்த ஊர்ல இருக்குற ஒரே உறவு அவர் தான், அதற்காக தான் பழனியை வரச் சொல்லி இருப்பதாக சொல்கிறாள். 

உமா குழந்தைக்கு என்ன பேரு என கேக்க, பிரியா கதிரேசன் என சொல்ல, அனைவரும் ஷாக், மேலும் பிரியா அமுதாவை பேர் வைக்க சொல்லி அழைக்க, அமுதா குழந்தையை நோக்கி நகர, அன்னலட்சுமி வேண்டாம் என தடுக்கிறாள். 

ஆனாலும் அமுதா குழந்தை காதில் கதிரேசன் கதிரேசன் என சொல்லி அழைக்க அன்னலட்சுமி அமுதாவிடம் கோபப்படுகிறாள். நம்ம மாமாவோட பேரு வைக்குறதுனால மாமாவோட பேரனாகிட முடியுமா, நம்ம மாமா நிறைய நல்லது செஞ்சுருக்காரு, அதனால யாரு வேணாலும் மாமா பேரை வச்சுக்கலாம் என சொல்ல, உமா, பழனி, பிரியா முறைக்கின்றனர்.

அதை தொடர்ந்து செந்தில் அமுதாவிடம் கல்பனா என்ன சொன்னா என கேக்க, பிரியாவை சார்லஸ்ன்னு ஒருத்தர் லவ் பண்ணாராமே அவர் எங்க இருக்காருன்னு சொல்லுங்க என கேக்க, என் பிரண்டு ரமேஷுக்கு அவனை நல்லா தெரியும் என சொல்கிறான். 

செந்திலின் நண்பன் ரமேஷ் செந்தில் வீட்டுக்கு வர செந்தில் ஷாக்காகி உன் கிட்ட தான் பேசனும்னு நினைச்சுகிட்டிருந்தேன் என சொல்ல ரமேஷ் பிரியாவை பார்த்து, பிரியா நீ இங்க என்ன பண்ற என கேக்க, நான் அவரோட மனைவி என சொல்கிறாள். செந்தில் அவனிடம் இது பத்தி கேக்க தான் உன்னை பார்க்கனும்னு நினைச்சேன் என சொல்கிறான். 

பிறகு செந்தில அவனிடம் எல்லாவற்றையும் சொல்லி நான் பிரியாவை லவ் பண்ணுனேனா என கேக்க, ரமேஷ் ஆமா நீ அவளை லவ் பண்ணுனே என சொல்ல அமுதா, அன்னம், செந்தில், மாணிக்கம் ஷாக்காகின்றனர். 

இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய அமுதாவும் அன்னலட்சுமியும் சீரியலை ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.

அமுதாவும் அன்னலட்சுமியும்: சீரியலை எங்கு பார்ப்பது

அமுதவும் அன்னலட்சுமியும் சீரியல் 2022 ஆம் ஆண்டு முதல் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வருகிறது. இது தவிர, டிஜிட்டல் தளமான ZEE5 -லும் இது ஸ்ட்ரீம் செய்யப்படுகின்றது.

மேலும் படிக்க | ஒரு வழியா தொப்பியை கழட்டிய சிவகார்த்திகேயன்.. புதிய லுக்கில் செம மாஸ்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: