‘துனியாதாரி”, ‘பாலக்-பாலக்’, ‘கிளாஸ்மேட்ஸ்’ போன்ற படங்களில் நடித்து மராட்டியத் திரையுலகில் தனக்கென்று ஒரு தனி இடத்தை பிடித்திருப்பவர் நடிகை சாய் தம்ஹங்கர். மராட்டியம் மட்டுமின்றி ‘மிமி’, ‘லவ் சோனியா’, போன்ற இந்தி படங்களிலும், சோலோ போன்ற மலையாளத் திரைப்படங்களிலும் நடித்திருக்கிறார். சமீபத்தில் மதுர் பண்டார்கர் இயக்கத்தில் இவரது நடிப்பில் வெளியான ‘இந்தியா லாக்டவுன்’ வெப் சீரிஸும் அனைவரது கவனத்தையும் பெற்றது. தற்போது லலித் பிரபாகருக்கு ஜோடியாக சாய் தம்ஹங்கர் நடித்து வருகிறார்.

இந்நிலையில் நடிகை சாய் தம்ஹங்கரின் ஓட்டுநரை இளைஞர்கள் கொடூரமாகத் தாக்கிய சம்பவம் மும்பையில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. சாய் தம்ஹங்கரிடம் கடந்த ஆறு ஆண்டுகளாக சதாம் மண்டல் என்பவர் ஓட்டுநராகப் பணிபுரிந்து வருகிறார். சில தினங்களுக்கு முன்பு நடிகை சாய் தம்ஹங்கரை வீட்டில் இறக்கிவிட்டு ஓட்டுநர் திரும்பி சென்றபோது நான்கு இளைஞர்கள் சாலையில் பைக்கை தாறுமாறாக ஓட்டிச் சென்றிருக்கின்றனர்.