
தமிழ்நாட்டில் மட்டுமல்ல சாதிய தீண்டாமை எங்கு நடந்தாலும் தவறுதான் என விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மேலும், சாதியை ஒழிக்கத்தான் தாங்கள் போராடி வருவதாகவும் குறிப்பிட்டார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அதிமுக கூட்டணியில் பாஜக இல்லை என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்த கருத்து அவர்கள் கட்சி சார்ந்தது. அதில் நான் தலையிட விரும்பவில்லை.
சநாதனத்தை எதிர்க்க தொடர்ந்து குரல் கொடுப்பேன். சமத்துவம் வேண்டி திமுக தொடர்ந்து பாடுபட்டு வருகிறது. மேலும், அடுத்த 25 ஆண்டுகளுக்கான போக்குவரத்து திட்டத்தை உருவாக்கும் வகையில் பொதுமக்கள் தயக்கம் காட்டாது கருத்துக்களை தெரிவிக்க வேண்டும்.
அதன் அடிப்படையில், அடுத்த 25 ஆண்டுகளில் போக்குவரத்து கட்டமைப்புகளை மேம்படுத்த அரசு நடவடிக்கை எடுக்கும் எனக் குறிப்பிட்டார்.