காஞ்சிபுரம் அருகே பைக்கில் சென்றபோது பிரபல யூடியூபர் டிடிஎஃப் வாசன் சாலை விபத்தில் சிக்கி பலத்த காயமடைந்துள்ளார். தற்போது மருத்துவமனையில் அவர் சிகிச்சை பெற்று வரும் நிலையில், விபத்து குறித்த சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது. அதில் அவர் வீலிங் சாகசம் செய்ய முற்பட்டபோது இந்த விபத்து ஏற்பட்டது பதிவாகி உள்ளது.

TTF Vasan

சென்னை – பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் பாலுசெட்டி சாத்திரம் அருகே பைக்கில் சென்ற அவர் பைக்கை வீலிங் செய்ய முயன்றபோது நிலை தடுமாறி விழுந்து விபத்து ஏற்பட்டுள்ளது. சாலைகளில், சாலை விதிகளை மதிக்காமல் அவ்வப்போது பயணம் செய்து சர்ச்சையில் சிக்குவார் டிடிஎஃப் வாசன். சாலை விதிகளை மதிக்காமல் செல்வது, அதிவேகம், இளைஞர்களை தவறாக வழிநடத்துகிறார் உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகள் இவர் மீது சுமத்தப்படுவதுண்டு. தற்போது நாயகனாக திரைப்படம் ஒன்றிலும் வாசன் நடித்து வருகிறார். இந்நிலையில் தான் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. மேலும், போலீஸார் இந்த விபத்து குறித்து, உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தும் வகையில் வாகனம் ஓட்டியது, கவனக்குறைவாக செயல்படுதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/3PaAEiY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/3PaAEiY

Source link

By Admin S

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *