வெண்ணெய் என்றால் எல்லோருக்கும் பிடித்தமானது தான். ஆனாலும், தோராயமாக 200, 300 கிராம் அளவுக்கு கூடுதலாக யாரும் வெண்ணெய் சாப்பிட மாட்டார்கள். அப்படியே சாப்பிட்டாலும் அதற்கு கொஞ்ச நேரம் எடுக்கும்.

ஆனால், அரைக்கிலோ வெண்ணெயை வெறும் 1 நிமிடம் 2.34 நொடிகளில் சாப்பிட்டு முடித்து கின்னஸ் சாதனை படைத்திருக்கிறார் ஒரு பெண். லியா என்ற பெண் முன்னெடுத்த இந்த சாதனை குறித்து கின்னஸ் சாதனை அமைப்பின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ வெளியிடப்பட்டுள்ளது.

ஒரு டேபிளின் முன்னே லியா அமர்ந்திருக்க, அவருக்கு முன்னால் வெண்ணெய் கட்டிகள் பெரியதாக வைக்கப்படுகின்றன. போட்டிக்கான கவுண்டன் தொடங்கிய அடுத்த சில நொடிகளிலேயே ஒரு வெண்ணெய் கட்டியை முழுவதுமாக சாப்பிட்டு முடித்தார் லியா. இரண்டாவது வெண்ணெய் கட்டியை சாப்பிடும்போது இவ்வளவு வேகம் இல்லை.

அவ்வப்போது லியா இடைவெளி எடுத்துக் கொண்டாலும், அதெல்லாம் ஓரிரு நொடிகள் தான். மற்ற உணவுகள் என்றாலும் கூட அதை மென்று, விழுங்குவதற்கு கொஞ்சம் நேரம் எடுத்திருக்கும். ஆனால், மென்மையான, வழுக்கிச் செல்லக் கூடிய வெண்ணெய் கட்டிகள் என்பதாலோ, என்னவோ லியாவுக்கு அதிக நேரம் தேவைப்படவில்லை.

தொழில்முறை உணவுப் பிரியர்

பசிக்கும், ருசிக்கும் உணவு சாப்பிடுவதையெல்லாம் தாண்டி, இன்றைக்கு சிலர் தொழில்முறை உணவுப் பிரியர்களாக மாறியிருக்கின்றனர். நாம் மலைத்துப் போய் பார்க்கின்ற அளவுக்கு மிகுதியான உணவை மிக வேகமாக தின்று தீர்ப்பதுதான் இதுபோன்ற உணவுப் பிரியர்களின் வேலை. அந்த வகையில், உணவுப் பிரியரான லியா வெவ்வேறு உணவுகளை போட்டி வைத்து சாப்பிட்டு, இதுவரை 33 முறை கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பிடித்துள்ளார்.

பாராட்டிய நெட்டிசன்கள்

லியாவின் கின்னஸ் சாதனை வீடியோவை இன்ஸ்டாகிராமில் பார்த்து வரும் ரசிகர்கள், அதற்கு கீழே பாராட்டியும், நகைச்சுவையாகவும் பதிவிட்டு வருகின்றனர். “இதுபோன்ற குறும்புத்தனமான சாதனையை நான் இதுவரையில் பார்த்தது இல்லை’’ என்று இன்ஸ்டாகிராம் யூசர் ஒருவர் கமெண்ட் செய்துள்ளார். இனி ஒரு முறை இந்த வெண்ணெயை சாப்பிடுவது குறித்து இந்தப் பெண் நினைத்துக் கூட பார்க்க மாட்டார் என்று மற்றொரு நபர் கமெண்ட் செய்துள்ளார்.

மற்றொருவரின் கின்னஸ் சாதனை

அமெரிக்காவின் நியூயார்க் பகுதியைச் சேர்ந்த எரிக் பிரிங்கெல்ஸ்டைன் என்னும் நபர், 24 மணி நேரத்திற்குள்ளாக அதிகப்படியான மிச்செலின் ஸ்டார் ரெஸ்டாரண்டிற்கு சென்றது குறித்து கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பிடித்துள்ளார். 2021ஆம் ஆண்டு வரையில் பொதுவாக அமர்ந்து சாப்பிடும் ரெஸ்டாரண்டுகளுக்கு மட்டுமே சென்று வந்த நிலையில், கொரோனா காலகட்டத்திற்குப் பிறகு மிச்செலின் ஸ்டார் வகை ரெஸ்டாரண்ட்களுக்கு இவர் செல்லத் தொடங்கினார். அதிலிருந்து விருப்பத்திற்குரிய உணவுகளை சாப்பிட்டு கின்னஸ் சாதனை படைத்திருக்கிறார்.

உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 46, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.

Source link

By Admin S

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: