நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தொடர் இன்று தொடங்கியுள்ளது. பழைய நாடாளுமன்றக் கட்டடத்தில் சிறப்புக் கூட்டத்தொடா் திங்கள்கிழமை தொடங்கியுள்ள நிலையில்,  இந்த கூட்டத்தொடரில், இன்று பழைய நாடாளுமன்றத்திற்கு விடை கொடுக்கப்பட்டு, நாளை முதல் புதிய நாளுமன்றத்தில் கூட்டம் நடைபெறும்.  75 ஆண்டுகால பயணமானது புதிய இடத்திலிருந்து தொடங்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.

நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத் தொடரை பிரதமர் நரேந்திர மோடி திங்கள்கிழமை தொடங்கி வைத்து, வரலாற்றுச் சிறப்புமிக்க கட்டிடத்தில் இருந்து விடைபெறப்போவதைக் குறிப்பிட்டு பேசுகையில், கடந்த 75 ஆண்டுகளாக இந்த நாடாளுமன்றத்தில் (பழைய நாடாளுமன்றம்) இருந்த அனைவரும் இந்திய கலாசாரத்தை பாதுகாத்து வந்துள்ளனர். நாம் புதிய நாடாளுமன்ற கட்டிடத்துக்கு போனாலும், இப்பழைய நாடாளுமன்ற கட்டிடம் வரும் தலைமுறையினருக்கான உத்வேகமாக நீடித்து இருக்கும்” என்றார். 

பழைய நாடாளுமன்றத்தின் மக்களவையில் இன்று கடைசியாக உரையாற்றிய பிரதமர் மோடி, “இந்த வரலாற்று கட்டிடத்திற்கு நாம் அனைவரும் விடை கொடுக்க இருக்கிறோம். சுதந்திரத்திற்கு முன், இந்த மாளிகை  பிரிட்டிஷ் ஏகாதிபத்திய ஆட்சிக்கான இடமாக இருந்தது. சுதந்திரத்திற்குப் பிறகு, இது நாடாளுமன்றம் என்ற அடையாளத்தைப் பெற்றது” என்று பிரதமர் கூறினார்.

“இந்த கட்டிடத்தை கட்டும் முடிவு வெளிநாட்டு ஆட்சியாளர்களால் எடுக்கப்பட்டது என்பது உண்மைதான். ஆனால் நாடாளுமன்ற கட்டிட கட்டுமானத்திற்காக உழைத்த உழைப்பு மற்றும் பணம் நமது நாட்டு மக்களுடையது என்று பெருமையுடன் கூற முடியும்,” என்று அவர் மேலும் கூறினார். .

விநாயகர் சதுர்த்தியையொட்டி, நாடாளுமன்றத்தின் ஐந்து நாள் சிறப்பு அமர்வு நாளை செவ்வாய்க்கிழமை புதிய அவைக்கு மாற்றப்படுகிறது.

பிரதமர் மோடியின் உரையின் முக்கிய அம்சங்கள்

1) “75 ஆண்டுகால நாடாளுமன்றப் பயணத்தை நினைவுகூர்ந்து முன்னோக்கிச் செல்ல வேண்டிய தருணம் இது. இன்று, இந்தியர்களின் அனைத்து சாதனைகளும் உலகெங்குலும் பேசப்படுகின்றன. 75 ஆண்டுகால நமது நாடாளுமன்ற வரலாற்றில் நமது ஒன்றுபட்ட முயற்சியின் பலன் இது.

2) “சந்திரயான்-3 இன் வெற்றி இந்தியாவை மட்டுமல்ல, உலகையும் பெருமைப்படுத்தியுள்ளது. தொழில்நுட்பம், அறிவியல், நமது விஞ்ஞானிகளின் திறன் மற்றும் நாட்டில் உள்ள 140 கோடி மக்களின் வலிமை ஆகியவற்றுடன் இணைந்த. இந்தியாவின் வலிமையின் புதிய அவதாரத்தை இது எடுத்துக்காட்டுகிறது. இன்று, நான் மீண்டும் நமது விஞ்ஞானிகளை வாழ்த்த விரும்புகிறேன்.”

3) “இன்று, அனைவரும் G20 இன் வெற்றியை ஒருமனதாகப் பாராட்டியுள்ளீர்கள்… அதற்காக நான் உங்களுக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். ஜி 20 நாட்டின் 140 கோடி குடிமக்களின் வெற்றி. இது இந்தியாவின் வெற்றி, ஒரு தனிநபரின் வெற்றியோ, கட்சியோ அல்ல.. இது நாம் அனைவரும் கொண்டாட வேண்டிய விஷயம்.

4) “இந்தியா அதிபராக இருந்தபோது (ஜி20) ஆப்பிரிக்க யூனியன் அதன் உறுப்பினரானதில் பெருமைப்படும். இந்த அறிவிப்பு வெளியான உணர்ச்சிகரமான தருணத்தை என்னால் மறக்க முடியாது. ஒருவேளை தான் பேசும்போது உடைந்துவிடக்கூடும் என்று ஆப்பிரிக்க யூனியன் தலைவர் கூறினார்.

5) “இவ்வளவு பெரிய நம்பிக்கைகள் மற்றும் எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற இந்தியா பெற்ற அதிர்ஷ்டத்தை உங்களால் கற்பனை செய்து பார்க்க முடியும்… இந்தியாவின் வலிமையினால் ஒரு மனதாக பிரகடனம் அறிவிப்பது சாத்தியமானது|” என்றார் பிரதமர் மோடி

மேலும் படிக்க | மூத்த குடிமக்களுக்கு செம என்ஜாய்மெண்ட்.. ஜாக்பாட் அறிவிப்பு வெளியிட்ட ரயில்வே

6) “இந்த  நாடாளுமன்ற கட்டிடத்தில் இருந்து விடைபெறுவது ஒரு உணர்ச்சிகரமான தருணம்… பல கசப்பான-இனிப்பான நினைவுகள் அதனுடன் இணைந்துள்ளன. நாங்கள் அனைவரும் பாராளுமன்றத்தில் கருத்து வேறுபாடுகள் மற்றும் விவாதங்களையும் கண்டிருக்கிறோம், ஆனால் அதே நேரத்தில், ‘நாம் அனைவரும் ஒரே குடும்பம் என்ற எண்ணத்தையும் ‘ நாம் கண்டிருக்கிறோம்.

7) “நேரு முதல் சாஸ்திரி … வாஜ்பாய் வரை, பல தலைவர்கள் இந்தியாவைப் பற்றிய தங்கள் பார்வையை முன்வைப்பதை இந்த பாராளுமன்றம் கண்டிருக்கிறது.”

8) “நான் எம்.பி.யாக இந்த கட்டிடத்தில் (பாராளுமன்றம்) முதன்முதலில் நுழைந்தபோது, ஜனநாயகத்தின் கோவிலை வணங்கி மரியாதை செய்தேன். அது எனக்கு உணர்ச்சிகரமான தருணம். ரயில்வே பிளாட்பாரத்தில் வசிக்கும் ஏழைக் குடும்பத்தைச் சேர்ந்த ஒருவன் நாடாளுமன்றத்தில் நுழைய முடியும் என்று நான் நினைத்துக்கூட பார்த்திருக்க முடியாது. மக்களிடம் இவ்வளவு அன்பைப் பெறுவேன் என்று நான் நினைத்துக்கூடப் பார்த்ததில்லை.”

9) “இனிப்பு மற்றும் கசப்பு அனுபவங்கள் உள்ளன, கருத்து மோதல் ஏற்பட்ட சூழ்நிலையும், சில சமயங்களில் மோதல் சூழ்நிலையும், சில சமயங்களில், மகிழ்ச்சியான சூழ்நிலையும் இருந்துள்ளன. இந்த நினைவுகள் அனைத்தும் நாம் அனைவருக்கு ஆன நினைவுகள், நமது பாரம்பரியம் நாம் அனைவருக்கும் ஆனது, எனவே, அதன் பெருமையும் நாம் அனைவருக்கும் சொந்தம்.”

10) ” நாடாளுமன்றத்தின் பயங்கரவாத தாக்குதல் நடந்தது. இது ஒரு கட்டிடத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதல் அல்ல. ஒருவகையில், இது ஜனநாயகத்தின் தாய் மீது, நமது உயிருள்ள ஆன்மா மீது நடத்தப்பட்ட தாக்குதல். அந்த சம்பவத்தை நாடு ஒரு போதும் மறக்க முடியாது. பயங்கரவாதிகளுக்கு எதிராக போராடும் போது, நாடாளும்ன்றன்ம் மற்றும் அதன் அனைத்து உறுப்பினர்களையும் காக்க, நெஞ்சில் குண்டுகள் தாங்கி உயிர் தியாகம் செய்தவர்களை நான் தலை வணங்குகிறேன்.

மேலும் படிக்க | எலி பிடிக்க செலவு இவ்வளவு ஆகுமா? 70 லட்ச ரூபாய் ஓவர்! உண்மை என்னன்னா…

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Source link

By Admin S

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: