ஜிம் டிரெட் மில்லில் ஓடிக்கொண்டிருந்த 19 வயது இளைஞர் ஒருவர் திடீரென ஹார்ட் அட்டாக் ஏற்பட்டு உயிரிழந்தார். இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. கடந்த சில வாரங்களாக ஜிம்மில் ஒர்க் அவுட் செய்து கொண்டிருக்கும் போது ஏற்படும் உயிரிழப்புகள் ஃபிட்னஸ் ஆர்வலர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. உத்தரப்பிரதேச மாநிலம் காஜியாபத்தில் இந்த சம்பவம் நடந்திருக்கிறது.
இங்குள்ள சரஸ்வதி விஹார் பகுதியில் சித்தார்த் குமார் என்ற 19 வயது இளைஞர் நேற்று ஜிம்மில் உடற்பயிற்சி செய்து கொண்டிருந்தார். வேகமாக அவர் ட்ரெட் மில்லில் ஓடிக் கொண்டிருந்தபோது அவருக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டுள்ளது. இதனால் சிறிது சிறிதாக கட்டுப்பாட்டை இழந்த அவர் ட்ரெட்மில்லில் இருந்து அப்படியே சரிந்து கீழே விழுந்தார்.
இளைஞர் கீழே விழுந்ததும் அவரை ஜிம்மில் இருந்தவர்கள் அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். இருப்பினும் அவர் உயிர் பிறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்திருக்கிறார்கள்.
SHOCKING:
Man Dies Of Heart Attack While Running On Treadmill At Ghaziabad Gym 😱🙄10Secs தான் எல்லாம் முடிஞ்சிருச்சு.
இந்த மாதிரி செய்திகள் இப்ப அதிகளவுல வருது. இதையெல்லாம் பார்க்கும்போது வாழ்க்கையே பயமா இருக்கு 😭 pic.twitter.com/NdtQag40KL
— Satheesh (@Satheesh_2017) September 17, 2023
உயிரிழந்த சித்தார்த் குமார் சிங் நொய்டாவில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் முதலாம் ஆண்டு படித்து வந்தார். வீட்டில் அவர் ஒரேயொரு பிள்ளை ஆவார். அவரது தந்தை நொய்டாவில் வசித்து வருகிறார். தாயார் பீகாரில் உள்ள அரசு பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். ]
இதையும் படிங்க – மேட்ரிமோனி தளத்தில் அறிமுகமான பெண்ணிடம் ரூ.1 கோடி இழந்த சாப்ட்வேர் இன்ஜீனியர்..
உயிர் பிரிவதற்கு 10 நிமிடங்களுக்கு முன்பாக தான் தனது தாயுடன் சித்தார்த் குமார் சிங் போனில் பேசியுள்ளார். உயிரிழந்த பின்னர் அவரது உடலை தந்தை சொந்த ஊரான பீகார் மாநிலம் சிவானுக்கு கொண்டு சென்றுள்ளார். ஜிம்மில் ட்ரெட் மில்லில் ஓடிக் கொண்டிருந்த இளைஞர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 46, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.