நடிகர் ரஜினிகாந்த் எதிர்நீச்சல் சீரியல் பார்த்து உங்களைப் பாராட்டியிருக்கார்னு கேள்விப்பட்டோமே?

'ஜெயிலர்' ரஜினி

‘ஜெயிலர்’ ரஜினி

அவர் கோலங்கள் அப்பவே என்னை தனியா கூப்பிட்டு பேசியிருக்கார். எந்திரன் ரிலீஸ் டைம்ல ரஜினி சாரைப் பார்க்கிறதுக்காக மண்டபத்துக்கு வரச் சொல்லியிருந்தாங்க. அவர் வந்ததும் கதவைத் திறந்துட்டு திருச்செல்வம்னு என் பெயர் சொல்லிக் கூப்பிட்டார். என் பெயரை எல்லாம் அவர் எப்படி தெரிஞ்சு வச்சிருக்காருன்னு தெரியல. என்னை கொஞ்ச நேரம் பார்த்துட்டே இருந்தார். எப்படி ஒரே ஆள் 1500 எபிசோட் திரைக்கதை, வசனம் எழுதி அதோடு ஆக்டிங்கும் பண்ணியிருக்கீங்கன்னு கேட்டார். டெலிவிஷன் சினிமாவை விட கம்மின்னு நினைச்சிட்டு இருந்த என் மனநிலையை உடைச்சது ரஜினி சார் தான்! இதுக்குப் பிறகு படம் பண்ணுங்கன்னு சொன்னார். அவர் கதை ஏதாவது எழுதியிருக்கீங்களான்னு கேட்டதும் அந்த டைம் நான் எழுதி வச்சிருந்த ஹீரோயின் சப்ஜெக்ட் கதையை அவர்கிட்ட சொன்னேன். கதை நல்லா இருக்கு ஆனா இது ஹீரோயின் பேஸ்டு சப்ஜெக்ட் ஆக இருக்கேன்னு சொன்னார். அப்பதான் அவர் கதை கேட்கிறார்… நாம இந்தக் கதையை சொல்லிட்டு இருக்கோம்னு எனக்குப் புரிஞ்சது. அதுக்கப்புறம் அவரை மீட் பண்ணல. சமீபத்தில் ஜெயிலர் படத்தில் மாரிமுத்து சாரைப் பார்த்துட்டு எங்க வீட்ல எதிர்நீச்சல் பார்க்கிறாங்கன்னு சொல்லி இப்ப நான் சொன்ன எல்லாத்தையும் அவர்கிட்ட சொல்லியிருக்கார். அவர் இதெல்லாம் சொல்லணும்னு அவருக்கு எந்த அவசியமும் இல்ல. ஆனாலும், செய்திருக்கிறார்.

இன்னும் பல விஷயங்கள் குறித்து திருச்செல்வம் நம்மிடையே பகிர்ந்து கொண்டார். அவற்றைக் காண லிங்கை கிளிக் செய்யவும்!

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: