இந்த போட்டியில் விளையாடாத மெஸ்ஸி மியாமியில் உள்ள பிரபல ரெஸ்ட்ராண்டில் பிட்சா சாப்பிட்டுள்ளார். அவர் சாப்பிட்ட பிட்சாவின் புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் பகிர்ந்திருந்தார். இதைத்தொடர்ந்து அந்த பிட்சாவை போல் மற்றொரு பீட்சாவை பகிர்ந்த அட்லாண்டா அணி நிர்வாகம், சில தக்காளி துண்டுகளை வைத்து ஆங்கில எழுத்தான ‘L’ என்பதை வடிவமைத்து, இண்டர் மிலன் தோல்வி அடைந்திருப்பதை அவ்வாறு கிண்டலடித்துள்ளனர். அத்துடன் தங்களது பதிவில், ” உங்கள் பயணத்தில் இந்த பிட்சாவை சாப்பிட்டு மகிழுங்கள்” எனவும் கேப்ஷனில் குறிப்பிட்டுள்ளனர்.