இந்தியாவில் உள்ள அதிக பாதுகாப்பு தேவைப்படுகின்ற ஏர்போர்ட்டுகளில் நடக்க வேண்டிய செக்யூரிட்டி சோதனைகள் விரைவாகவும், அதே நேரத்தில் எந்த ஒரு பிழையும் இல்லாமல் நடைபெறுவதற்கு ஏர்போர்ட் அத்தாரிட்டி ஆஃப் இந்தியா (Airport Authority of India – AAI) ஃபுல் பாடி ஸ்கேனர்களை இன்ஸ்டால் செய்வதற்கான அனுமதியை பப்ளிக் இன்வெஸ்ட்மென்ட் போர்டில் (Public Investment Board – PIB) இருந்து பெற்றுள்ளது.

கடந்த ஜூலை மாதத்தில் 131 புல் பாடி ஸ்கேனர்களை பெறுவதற்கான டெண்டரை அரசு வெளியிட்டிருந்தது. இதனை பயன்படுத்துவதன் மூலமாக தற்போது 30 வினாடிகள் நேரம் எடுக்கக்கூடிய பாதுகாப்பு சோதனை நேரம் பாதியாக குறைக்கப்பட்டு 15 வினாடிகளில் சோதனை செய்யப்படும் செய்யப்படும். இது தவிர 1000 கோடி ரூபாய் செலவில் 600 புதிய ஹேண்ட் பேக்கேஜ் ஸ்கேனர்கள் பெறுவதற்கான டெண்டரும் வெளியிடப்பட்டிருந்தது. ஆனால் PIB இடமிருந்து இதற்கான அனுமதி பெற்றிடாத நிலையில், ஏர்போர்ட் அத்தாரிட்டி ஆஃப் இந்தியா இந்த டென்டரை வாபஸ் பெற்றுக் கொண்டது.

இந்த திட்டத்திற்கான முதலீட்டு செலவு 500 கோடி ரூபாயாக கணக்கிடப்பட்டுள்ளது. ஆரம்பத்தில் ஏர்போர்ட் ஆத்தாரிட்டி ஆஃப் இந்தியா கட்டுப்பாட்டின் கீழ் வரும் அம்ரித்சர், கோவா, ஸ்ரீநகர், ஜம்மு, லே, வாரணாசி, சென்னை, கொல்கத்தா, ராய்ப்பூர், திருப்பதி, போபால் உட்பட 43 ஏர்போர்ட்களில் 1000 கோடி ரூபாய் செலவில் 131 ஃபுல் பாடி ஸ்கேனர்கள் மற்றும் 600 புதிய ஹேண்ட் பேக்கேஜ் ஸ்கேனர் மெஷின்கள் இன்ஸ்டால் செய்யப்பட வேண்டும் என்ற ப்ரொபோசல் விடுக்கப்பட்டிருந்தது.

இருப்பினும் ஒரிஜினல் பிளானின் படி ஒரேடியாக எல்லா ஏர்போர்ட்டுகளிலும் ஃபுல் பாடி ஸ்கேனர்களை இன்ஸ்டால் செய்வதற்கு பதிலாக, ஏர்போர்ட் அத்தாரிட்டி ஆஃப் இந்தியாவிற்கு சொந்தமான மற்றும் அதன் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கி வரும் நான்கு ஏர்போர்ட்டுகளில் இந்த ஸ்கேனர்களை முதலில் இன்ஸ்டால் செய்வது என ஏர்போர்ட்டுகளில் உள்ள பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் தொடர்புடைய ஸ்டேட் ஹோல்டர்களுடன் நடத்தப்பட்ட சந்திப்பின் போது முடிவு எடுக்கப்பட்டது. இந்த சந்திப்பில் மினிஸ்ட்ரி ஆஃப் சிவில் ஏவியேஷன், ஏவியேஷன் மினிஸ்ட்ரி, மினிஸ்ட்ரி ஆஃப் ஹோம் அஃபயர்ஸ் மற்றும் பிற துறைகள் சார்ந்த அனுபவம் மிக்க அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

“இந்த நான்கு ஏர்போர்ட்டுகளில் இன்ஸ்டால் செய்யப்படும் ஃபுல் பாடி ஸ்கேனர்கள் எந்த அளவிற்கு வெற்றி பெறுகிறது என்ற ஆய்வு அறிக்கையின் அடிப்படையில் இந்த வசதி கூடிய விரைவில் எல்லா ஏர்போர்ட்டுகளிலும் அமைக்கப்படும். இந்த சந்திப்பில் ஸ்கேனர்களின் இன்ஸ்டாலேஷன், பாதுகாப்பு அதிகாரிகளுக்கு வழங்க வேண்டிய பயிற்சி மற்றும் செயல்பாடுகள் போன்றவை குறித்து விவாதிக்கப்பட்டது,” என்று மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இதையும் படிங்க : கைவினை கலைஞர்களுக்கு கடன் வழங்கும் ’விஸ்வகர்மா’… பிரதமர் தொடங்கி வைத்த திட்டம்!

மில்லி மீட்டர் வேவ் டெக்னாலஜி அடிப்படையில் செயல்படுகின்ற இந்த ஃபுல் பாடி ஸ்கேனர்கள் உடலில் மறைத்து வைக்கப்பட்டுள்ள பொருட்களை எளிதில் கண்டுபிடிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது என்றும் அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. தற்போது இந்தியாவில் உள்ள 137 ஏர்போர்ட்டுகள் AAI கட்டுப்பாட்டின் கீழ் இயங்கி வருகிறது. இதில் 24 சர்வதேச ஏர்போர்ட்டுகள், 10 கஸ்டம்ஸ் ஏர்போர்ட்டுகள் மற்றும் 103 டொமஸ்டிக் ஏர்போர்ட்டுகள் அடங்கும்.

உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 46, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.

Source link

By Admin S

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: