ஆக்ஷனும் பரபரப்பும் மட்டுமல்லாமல் துரோகம், பிரிவு, காதல், குடும்பம், நட்பு என ஏற்ற இறக்கங்கள் நிறைந்த இரண்டு டான்களின் கதையைப் பேச முயன்றிருக்கிறார் இயக்குநர். முதற்பாதியில், கதாநாயகனுக்கு டன் கணக்காக பில்டப் சீன்களால் புகழ்பாடிக்கொண்டே இருக்கிறார்கள். இது தொடக்கத்தில் ஆர்வத்தைத் தூண்டினாலும், ஒருகட்டத்தில் ‘பேசிகிட்டே இருக்காங்களே தவிர, பாம்பை வெளியே விட மாட்றாங்களே!’ என்று கமென்ட் அடிக்கத் தோன்றுகிறது. ஒருவழியாகத் திரைக்கதை கிங் ஆஃப் கோதாவான ராஜுவை விவரிக்கத் தொடங்கினாலும், அங்கும் பில்டப் காட்சிகளை மட்டுமே சேர்த்துக்கொண்டே இருக்கிறார்கள். இவ்வளவு பராக்கிரமங்களைக் கொண்ட ராஜுதான் ‘கிங்’ என்பதைப் பதிய வைக்க எந்த அழுத்தமான காட்சியும் வைக்கப்படவில்லை.