மதுரை: ‘நியோ மேக்ஸ் ’ நிறுவன மோசடியில் முக்கிய நபர்களான கமலக்கண்ணன், சிங்காரவேலன் ஆகியோரை சென்னையில் நேற்று தனிப்படை போலீஸார் கைது செய்தனர்.

மதுரையைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்ட ‘நியோ-மேக்ஸ்’ ரியல் எஸ்டேட் மற்றும் அதன் துணை நிறுவனங்கள் கூடுதல் வட்டி, வைப்பீடு முதிர்வுக்கு இரட்டிப்புத் தொகை தருவதாக ஏராளமானோரிடம் முதலீடுகளைப் பெற்றனர். இதன்மூலம் பல நூறு கோடி ரூபாய் முறைகேடு நடந்ததாக புகார்கள் எழுந்தன.

இது தொடர்பாக பாதிக்கப்பட்டோர் கொடுத்த புகார்களின் பேரில்,மதுரை பொருளாதார குற்றத் தடுப்பு போலீஸார் ‘ நியோ மேக்ஸ்’மற்றும் அதன் துணை நிறுவனங்களின் நிர்வாக இயக்குநர்கள் மதுரைகமலக்கண்ணன் (55), பாலசுப்பிரமணியன் (54), திருச்சி வீரசக்தி (49)மற்றும் முகவர்கள் மீதும் வழக்கு பதிவு செய்தனர்.

இவ்வழக்கை எஸ்பி ஜோஸ் தங்கையா தலைமையில், சிறப்பு டிஎஸ்பி மணிஷா அடங்கிய குழுவினர் விசாரிக்கின்றனர்.

இவ்வழக்கில் ஏற்கெனவே 9பேர் கைது செய்யப்பட்டனர். இந்தமுறைகேட்டில் முக்கிய நபர்களான கமலக்கண்ணன், பாலசுப்பிரமணி, வீரசக்தி, சிங்காரவேலன் உள்ளிட்டோரை தனிப்படையினர் தொடர்ந்து தேடினர்.

இந்நிலையில், சென்னையில் கமலக்கண்ணன், சிங்காரவேலன் ஆகியோரை தனிப்படையினர் நேற்று கைது செய்தனர். அவர்களிடம் விசாரணை நடத்த மதுரைக்கு அழைத்து வருகின்றனர்.

இது குறித்து போலீஸார் கூறுகையில், ‘ நியோ மேக்ஸ்’ நிறுவனத்தின் நிர்வாக இயக்குநராக இருந்தவர் கமலக்கண்ணன். இவ்வழக்கில் முக்கிய நபர். தலைமறைவாக இருந்துகொண்டு முகவர்கள் மூலம் பாதிக்கப்பட்டோரை புகார் கொடுக்க விடாமல் தடுக்கும் நிலையில் செயல்பட்டார். போலீஸாருக்கும் சவாலாக இருந்தார். இவரை கைது செய்துள்ளோம் இவரிடம் விசாரித்தால் பல்வேறு புதிய தகவல்கள் கிடைக்கும்’ என்றனர்.

Source link

By Admin S

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *