பெங்களூரில் செயல்பட்டு வரும் இகாமர்ஸ் நிறுவனத்தில் பணியாற்றிவரும் ஊழியர் ஒருவர் தினமும் 12 மணி நேரம் கடினமாக உழைக்கிறேன். ஆனால் சம்பாதிக்கும் வருமானத்தில் 50% வருமான வரிக்கே செலுத்த வேண்டியிருக்கிறது. இதனால் எரிச்சலடைகிறேன் என்று டிவிட்டரில் தெரிவித்துள்ள கருத்துகள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஒவ்வொரு சமானிய இந்திய குடிமகனும் தன்னுடைய வருமானத்திற்கான வரியை ஆண்டுதோறும் செலுத்த வேண்டியது கடமை. அந்த வகையில் ஜுலை 31 ஆம் தேதிக்குள் வருமான வரியைச் செலுத்துவதற்காக பலரும் முந்தியடித்துக் கொண்டு தங்களது கணக்குகளை சரிப்பார்த்து வருகின்றனர்.

இந்நிலையில் பெங்களூருவில் உள்ள ஃபிளிப்கார்ட் நிறுவனத்தில் வணிக மேலாளராக பணியாற்றிவரும் சஞ்சித் கோயல் என்பவரும் வருமான வரி செலுத்துவது குறித்து டிவிட்டரில் கருத்து பதிவிட்டுள்ளார். அதில் இன்று நான் ரூ.5,000 சம்பாதிக்கிறேன். அதற்காக 30% வருமான வரியை அரசுக்கு செலுத்த வேண்டியிருக்கிறது.

மேலும் சில காஃபின் பொருட்களை வாங்க நினைத்தேன். அதற்காக 28% வரியாக கொடுக்க வேண்டியிருக்கிறது. ஆக மொத்தம் எனது வருமானத்தில் 50% அரசுக்கு செலுத்துவதற்காக நான் ஒரு நாளைக்கு 12 மணி நேரம் உழைக்கிறேன் என்பதை உணர்ந்து கொண்டேன் எனப் பதிவிட்டுள்ளார்.

மேலும் சஞ்சித் கோயல் தனது அடுத்த பதிவில், 20 ரூபாய் மதிப்புள்ள சாகோபார் சாக்லேட் வாங்குவதற்காக 18% ஜிஎஸ்டி செலுத்துகிறேன். இதனால் 3.6 ரூபாய் வரிசெலுத்த வேண்டியிருக்கிறது. சர்க்கரைக்கு 18% இதனால் ரூ.0.36, கோகோ பொருட்களுக்கு 18% ஜிஎஸ்டி அந்த வகையில் ரூ.0.9, பதப்படுத்தப்பட்ட கெட்டியான பால் பொருட்களுக்கு 12% ஜிஎஸ்டி அதற்கு ரூ.0.6, ஐஸ்க்ரீம் போன்ற பொருட்களுக்கு 5% ஜிஎஸ்டி அந்த வகையில் ரூ.0.1. மற்ற செலவுகளுக்காக ரூ.5.5 ஆக மொத்தம் 27.5% – எட்டிவிடுகிறது எனப் பதிவிட்டுள்ளார்.

சஞ்சித் கோயல் டிவிட்டரில் கூறியுள்ள இந்தக் கருத்துகள் தற்போது இணையத்தில் பேசுபொருளாகி இருக்கும் நிலையில் பலரும் அதை வரவேற்று தங்களது விமர்சனங்களை வெளியிட்டு வருகின்றனர். அதிலும் குறிப்பாக “ஐஸ்கிரீம் என்பது ஜிஎஸ்டியுடன் கூடிய ஒரு ஆடம்பரப் பொருள். ஐஸ்கிரீம் சாப்பிடுவதற்கு நீங்கள் பணக்காரராக இருக்க வேண்டும் என்று எனக்குத் தெரியாது என்று குறியிருப்பது இணையத்தில் சிரிப்பலையை வரவழைத்து இருக்கிறது

இன்னொரு இணையவாசி “நண்பா நடுத்தர வர்க்கத்தின் சம்பளம் வாங்குபவர்களின் நிலைமை இதுதான். நாங்கள் வரி செலுத்த மட்டுமே வேலை செய்கிறோம். இறுதியில் ஜிஎஸ்டி என்பது வாடிக்கையாளர் செலுத்த வேண்டிய ஒன்று. வணிகங்கள் தங்கள் பாக்கெட்டில் இருந்து செலத்த வேண்டிய ஒன்று அல்ல’ என்று கூறியிருக்கிறார்.

இந்த நிலையில் சஞ்சித் கோயல் வெளியிட்டுள்ள இந்தப் பதிவு தற்போது இணையத்தில் பேசுபொருளாகி பெரிய விவாதத்தையே ஏற்படுத்தி உள்ளது. இதனால் இணையவாசிகள் பலரும் தங்களது கருத்துகளை தெரிவித்து வருவதும் குறிப்பிடத்தக்கது.

Source link

By Admin S

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: