டிடிஎஃப் வாசன் என்பவர் இருசக்கர வாகன பயணத்தின் மூலம் யூடியூப்பில் பிரபலமானவராக அறியப்படுகிறார். யூடியூப்பில் தனி ரசிகர் பட்டாளத்தைக் கொண்டுள்ள இவர் அடிக்கடி அதிவேகமாக பயணம் செய்து சாகசங்களை மேற்கொண்டு வருவார்.
இந்நிலையில், இன்று காஞ்சிபுரத்திற்கு அருகே சென்னை – பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் தன் இருசக்கர வாகனத்தின் முன் சக்கரத்தைத் தூக்கி சாகசம் செய்துள்ளார். அப்போது, கட்டுப்பாட்டை இழந்த வாகனம் 2 முறை தலைகீழாக சுழன்று விழுந்தததில் டிடிஎஃப் வாசன் படுகாயமடைந்துள்ளார்.
இதையும் படிக்க | தமிழ்நாட்டை முடக்கவே நீட் தேர்வு: முதல்வர் ஸ்டாலின் பேச்சு
உடனடியாக அவரை மீட்டு, மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்கு பரிசோதனை செய்ததில் அவரின் வலது கை முறிந்ததுடன் உடலில் காயங்கள் ஏற்பட்டுள்ளது தெரிய வந்தது. பின், அதற்கான சிகிச்சையைப் பெற்று அவர் வீடு திரும்பியுள்ளார்.
டிடிஎஃப் வாசன் மஞ்சள் வீரன் என்கிற படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
BREAKING: Popular YouTuber #TTFVasan met with an accident. pic.twitter.com/3UEuasmnFg
— Manobala Vijayabalan (@ManobalaV) September 17, 2023