மதுரை காந்தி நினைவு அருங்காட்சியகத்தில் காந்தி அடிகள் பற்றி முழுமையாக படிக்கக்கூடிய வகையில் காந்திய கல்வி ஆராய்ச்சி நிறுவனம் சார்பாக ஒவ்வொரு ஆண்டும் காந்திய கல்வி பட்டய படிப்பு நடைபெறும்.

இந்த காந்தி கல்வி பட்டய படிப்பில் காந்திய சிந்தனை சான்றிதழ் பட்டய படிப்பு, சம உரையாடல், கல்வி பட்டய படிப்பு, யோகா பட்டய படிப்பு போன்ற படிப்புகள் இருக்கின்றது. இந்தப் பட்டய படிப்பை பன்னிரண்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் படிக்கலாம். இது போக ஒரு துறையில் பட்டம் பெற்றவர்கள் கல்வி முதுநிலை பட்டய படிப்பு யோகா, முதுநிலை பட்டய படிப்பில் சேர்ந்து படிக்கலாம்.

இந்த காந்திய கல்வி பட்டைய படிப்பு படிப்பதன் மூலம் காந்தியடிகள் பற்றியும் காந்தியடிகள் அகிம்சை பற்றியும் ஒருவன் வாழ்வில் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பது பற்றியும் அறிந்து கொள்ளும் வகையில் இருக்கும்.

இந்த வகுப்புகள் வாரத்தில் சனிக்கிழமை மட்டும் காலையில் பட்டய படிப்பிற்கான வகுப்புகளும் மாலை நேரத்தில் முதுநிலை பட்டய படிப்பிற்கான வகுப்புகளும் நடைபெறும்.

தற்பொழுது காந்திய கல்வி ஆராய்ச்சி நிறுவனம் சார்பாக காந்திய கல்வி பட்டய படிப்பை படிப்பதற்கான விண்ணப்பம் துவங்கியுள்ளது. இந்த காந்திய கல்வி பட்டிய படிப்பில் சேர விருப்பமுள்ளவர்கள் ஆகஸ்ட் 31ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்றும் மேலும் தகவல்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என்றால் 9995123091 என்ற எண்ணிற்கு தொடர்பு கொள்ளலாம் என்று காந்திய கல்வி ஆராய்ச்சி நிறுவனம் சார்பாக தேவதாஸ் தெரிவித்துள்ளார்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 46, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.

Source link

By Admin S

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *