அந்தக் கடனில் தயாரித்த படமும் சரியாக ஓடவில்லை. இதனால் சன்னி தியோலால் கடனை கட்டமுடியவில்லை. ரூ.56 கோடி அளவுக்கு வங்கிக்கு கொடுக்கவேண்டியிருக்கிறது. அந்த கடனுக்காக மும்பை ஜுகு பகுதியில் சன்னி தியோலுக்கு சொந்தமான ஒரு பங்களா வீட்டை ஏலம் விட வங்கி நிர்வாகம் முடிவு செய்துள்ளது. அந்த வீட்டை சன்னி தியோல் ஸ்டூடியோவாக பயன்படுத்தி வந்தார். அதில் ஏராளமான பாலிவுட் படங்கள் எடிட் செய்யப்பட்டுள்ளது.
வீடு அடுத்த மாதம் 25ம் தேதி ஏலம் விடப்படும் என்று கூறி நோட்டீஸ் அனுப்பியிருந்தது. இதனால் என்ன செய்வது என்று தெரியாமல் இருந்தார் சன்னி தியோல். ஆனால் திடீரென சன்னி தியோலுக்கு அனுப்பிய நோட்டீஸை வங்கி நிர்வாகம் திரும்ப பெற்றுக்கொண்டுள்ளது.
சன்னி தியோல் படம் தற்போது நன்றாக ஓடுவதால் அவர் பணத்தைக் கட்டிவிடுவார் என்ற நம்பிக்கை இருப்பதாகவும், தொழில் நுட்ப காரணமாக அவரது வீடு ஏலம் விடப்படுவதாக நோட்டீஸ் அறிவிக்கப்பட்டு விட்டதாகவும், தற்போது அந்த நோட்டீஸ் திரும்ப பெறப்படுவதாகவும் வங்கி தரப்பில் வெளியிடப்பட்டு இருந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டு இருந்தது.