பாபி சிம்ஹா நடிக்கும் ‘தடை உடை’ படத்தின் முதல் தோற்றத்தை படக்குழு வெளியிட்டுள்ளது.

‘சூது கவ்வும்’ படத்தின் நலன் குமாரசாமி, ‘எங்கேயும் எப்போதும்’ படத்தின் சரவணன் ஆகிய இயக்குநர்களிடம் உதவி இயக்குநராக பணியாற்றியவர் ராகேஷ். அவர் இயக்குநராக அறிமுகமாகும் திரைப்படம் ‘தடை உடை’. படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் நடிகர் பாபி சிம்ஹா நடிக்கிறார். நாயகியாக மிஷா ரங் நடித்துள்ளார். இவர்களுடன் ரோகிணி, செந்தில், பிரபு, சந்தான பாரதி, செல் முருகன், சரத் ரவி தங்கதுரை, தீபக் ரமேஷ், மணிகண்ட பிரபு, சுப்பிரமணியம் சிவா ஆகியோர் இணைந்து நடித்துள்ளனர்.

நகரம், கிராமம் என இரு இடங்களில் கதை நடப்பதாக, இப்படத்தின் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையிலும், சிவகங்கையைச் சுற்றியுள்ள கிராமப்பகுதிகளிலும் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. அறிமுக இசையமைப்பாளர் ஶ்ரீ இசையில் இப்படத்தின் பாடல்களை கவிப்பேரரசு வைரமுத்து எழுதியுள்ளார். சமீபத்தில் தேசிய விருது வென்ற இசையமைப்பாளர் ஶ்ரீகாந்த் தேவா பின்னணி இசை அமைத்துள்ளார்.

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: