குஜராத்தில் பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்தநாளை ஒட்டி, ஆட்டோ ஓட்டுநர்கள் 100 சதவிகிதம் தள்ளுபடி அறிவித்துள்ளனர்.
பிரதமர் நரேந்திர மோடியின் 73 ஆவது பிறந்தநாளை ஒட்டி, நாடு முழுவதும் அவரது ஆதரவாளர்கள் பல்வேறு வகையில் வாழ்த்து தெரிவித்துள்ளனர். குறிப்பாக சூரத்தில், 73 ஆட்டோ ஓட்டுநர்கள், ஒரு நாள் முழுவதும் இலவசமாக வாடிக்கையாளர்களுக்கு சேவை வழங்க முடிவு செய்துள்ளனர்.
இதே போன்று உத்தர பிரதேச மாநிலம் லக்னோவில், மாற்றுத்திறனாளிகள் சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்கு பிரதமர் மோடிக்கு பிறந்தநாள் வாழ்த்து அட்டை தயாரித்து வாழ்த்தியுள்ளனர். ஒடிசா மாநிலம் பூரி கடற்கரையில், 50 கோனார்க் சக்கரம் மூலம், பிரதமர் மோடியின் மணல் சிற்பத்தை சுதர்சன் வடிவமைத்துள்ளார்.
இதே போன்று ஒடிசா மாநிலம் கட்டக்கில் புகை மூலம், பிரதமர் மோடியின் உருவத்தை தீபக் பிஸ்வால் என்ற கலைஞர் உருவாக்கி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
#WATCH | Odisha: A Cuttack-based smoke artist, Deepak Biswal makes a portrait of PM Narendra Modi for his 73rd birthday.
PM Modi is celebrating his birthday today, 17th September. pic.twitter.com/xo752bW5z7— ANI (@ANI) September 16, 2023
மேலும் குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் பாஜகவினர் கேக் வெட்டி, மோடியின் பிறந்தநாளை கொண்டாடினர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 46, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.