சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய ஜெயக்குமார், “அண்ணாமலை தனியாகப் போட்டியிட்டால் நோட்டாவை தாண்ட மாட்டார். தலைவர் பதவிக்கு தகுதியில்லாதவர் அண்ணாமலை. பெரியார், அண்ணாவைப் பற்றி பேச என்ன தகுதி இருக்கிறது. இதோடு பேச்சை நிறுத்துங்கள் என்று பலமுறை எச்சரிக்கை விடுத்தோம். அ.தி.மு.க-வினர் இனிமேல் அண்ணாமலையை கடுமையாக விமர்சனம் செய்வார்கள். அ.தி.மு.க-வுடன் கூட்டணி வேண்டும் என்பதை பா.ஜ.க தொண்டர்கள் விரும்புகிறார்கள். ஆனால், அண்ணாமலை விரும்பவில்லை.

அண்ணாமலை - ஜெயக்குமார்

அண்ணாமலை – ஜெயக்குமார்

அப்படி பா.ஜ.க-வை சுமக்க வேண்டிய அவசியம் எங்களுக்கு இல்லை. பா.ஜ.க-வால் இங்கே காலூன்றவே முடியாது. எங்களை வைத்துதான் பா.ஜ.க-வுக்கு அடையாளமே. இனியும் பொறுத்துக்கொள்வதாக இல்லை. எனவே. கூட்டணியைப் பொறுத்தவரை பா.ஜ.க, அ.தி.மு.க-வுடன் கூட்டணியில் இல்லை. தேர்தல் வரும் நேரத்தில் அதை முடிவுசெய்ய முடியும். இதுதான் எங்கள் நிலைப்பாடு. கட்சியின் கருத்தும் கூட. இனிமேல் அண்ணாமலை எங்கள் தலைவர்களை விமர்சனம் செய்தால், கடுமையான விமர்சனங்களை அண்ணாமலை சந்திக்க நேரும்” என்றார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/3PaAEiY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/3PaAEiY

Source link

By Admin S

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: