4 வருட திருமண வாழ்க்கை, எமோஷனல் பதிவை வெளியிட்ட ரிச்சா: ரிச்சா கங்கோபத்யாய் இந்தியத் திரைப்பட நடிகை, மாடல் மற்றும் முன்னாள் அழகி ஆவார். சிலப்பல விளம்பரங்களில் நடித்த பிறகு, 2010 இல் தெலுங்கில் வெளிவந்த லீடர் என்ற படத்தில் அறிமுகமானார். பிறகு நாகவல்லி மற்றும் மிரபகாய் படங்கள் மூலம் பிரபல்யம் அடைந்தார். அடுத்தடுத்த வெற்றி படங்களை கொடுத்த இவர் தமிழில் தனுஷின் மயக்கம் என்ன படத்தில் நடித்து அறிமுகமானார் அதனைத் தொடர்ந்து ஒஸ்தி இந்த இரண்டு படங்களுமே வெற்றி பெற்றதை தொடர்ந்து முன்னணி நடிகையாக மாறினார்.

இதனை அடுத்து நடிகை ரிச்சா, ஒரு சில தெலுங்கு படங்களில் மட்டும் நடித்தார். பின்னார் 2013 ஆம் ஆண்டு இனி சினிமாவில் நடிக்கப் போவதில்லை எனக்கூறி சினிமாவில் இருந்து ஒரேடியாக விளக்கினார். இதைத் தொடர்ந்து இவர் தனது எம்பிஏ படிப்பதற்கு அமெரிக்கா சென்றார். அங்கு தான் படிக்கும் கல்லூரியில் சக மாணவரான ஜோ லங்கேலா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அதன்படி இவர்களின் திருமணம் இந்திய – மேற்கத்திய முறையில் நடைபெற்றது. இதைத் தொடர்ந்து இந்த தம்பதிக்கு கடந்த 2021 ஆம் ஆண்டு ம்ஏ 27 ஆம் தேதி ஒரு மகன் பிறந்தார். அந்த குழந்தைக்கு லுகா ஷான் லங்கீலா என பெயரிட்டார் நடிக்கை ரிச்சா.

மேலும் படிக்க | அப்போ விவேக்..இப்போ மாரிமுத்து! வரிசையாக உயிரிழக்கும் இந்தியன் 2 பட நடிகர்கள்..!

 

 

இந்த நிலையில் நடிகை ரிச்சா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது நான்காவது ஆண்டு திருமண நாளை ஒட்டி எமோஷனல் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில் அவர்., நாங்கள் நான்கு ஆண்டுகளுக்கு முன்பு இணைந்தோம். நான் மிகவும் அற்புதமான மனிதனிடம் எனது காதலைச் சொன்னேன். நாங்கள் வெவ்வேறு உலகங்களை சேர்ந்தவர்கள், ஆனால் எங்களுக்கு தனித்துவமான பாதைகள், அன்பு மற்றும் பரஸ்பர மரியாதை இருந்தது. இருவரும் ஒரு அழகான பயணத்தை ஒன்றிணைந்து செய்து வருகிறோம்.

கடந்த நான்கு ஆண்டுகளில் உண்மையிலேயே சிறப்பான ஒன்றை நாங்கள் உருவாக்கி உள்ளோம். எதிர்காலம் என்னவாக இருக்கும் என்பது எங்களுக்கு தெரியாது. ஆனால் உங்களுடன் வாழ்க்கையை செலவிட என்னை தேர்வு செய்ததற்கு நன்றி’ என்று பதிவு செய்துள்ளார். 

இந்நிலையில் இந்த பதிவுக்கு அவரது ரசிகர்கள் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர், மேலும் இவரது இந்த பதிவானது தற்போது வைரலாகி வருகின்றது.

மேலும் படிக்க | சண்டே ஸ்பெஷல்-டாடா to பதான்..எந்த சேனலில் என்னென்ன புது படங்கள் பார்க்கலாம்..?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: