இந்திய கிரிக்கெட் அணியில் இளம் வீரராக அதுவும் எடுத்த எடுப்பிலேயே டாப் ஆர்டர் பேட்ஸ் மேனாக களம் இறங்கி விளையாடிவரும் இளம் வீரரான யஷஸ்வி ஜெய்ஸ்வால் பற்றியப் பேச்சுத்தான் ரசிகர்களிடையே அதிகரித்து இருக்கும் நிலையில் தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் ஜாம்பவான் ஏபி டிவில்லியர்ஸ், யஷஸ்வி குறித்து பேசியிருக்கும் கருத்துகள் மேலும் ஆச்சர்யத்தை அளித்து வருகின்றன.

ஐபிஎல் தொடர்களில் கவனம் ஈர்த்த யஷஸ்வி ஜெய்ஸ்வால் தற்போது வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் விளையாடி வருகிறார். இடது கை பேட்ஸ்மேனான இவர் டாப் ஆர்டர் பேட்ஸ் மேனாக தனது முதல் சர்வதேசப் போட்டியில் களம் இறங்கி விளையாடி 387 பந்துகளுக்கு 171 ரன்களைக் குவித்துள்ளார். இதனால் ஆட்டநாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட அவர் சர்வதேசக் கிரிக்கெட் போட்டியில் முதல் போட்டியிலேயே சதம் அடித்த மூன்றாவது இந்திய வீரர் என்ற பெருமையையும் தட்டிச்சென்றுள்ளார்.

அந்த வகையில் கிரிக்கெட் ஜாம்பவான்கள் முதற்கொண்டு பலரும் யஷஸ்வியைப் புகழ்ந்து வருகின்றனர். இந்நிலையில் தென்னாப்பிரிக்க முன்னாள் கேப்டனும் நட்சத்திர வீரருமான ஏபி டிவில்லியர்ஸ் யஷஸ்வியைப் பார்த்து அவரிடம் ஏதோ சிறப்பு இருக்கிறது. ஐபிஎல் போட்டிகளிலேயே கவனித்தேன். எதிர்காலத்தில் திறமையான வீரராக வருவார். இடது கை பேட்ஸ்மோனாக இருப்பதால் வேகப்பந்து மற்றும் சுழல் பந்து இரண்டையும் சாதகமாக எதிர்கொள்ள முடியும்.

அவர் பந்து விச்சை எதிர்கொள்ளும்போது நிதானமாக கணித்து விளையாடுகிறார். அவருடைய உயரமும் பக்கபலமான விஷயமாக இருக்கிறது. முதல் சர்வதேசப் போட்டியிலேயே அதுவும் டாப் ஆர்டர் பேட்ஸ்மேனாக இருந்து சதம் அடிப்பது அவ்வளவு எளிதானது அல்ல என்று டிவில்லியர்ஸ் புகழ்ந்துள்ளார்.

யஷஸ்வியைத் தவிர ரவிச்சந்திரன் அஸ்வின் குறித்தும் பேசிய அவர் நீண்ட காலமாக கவனித்து வருகிறேன். அஸ்வின் அனைத்து சீசன் போட்டிகளிலும் சிறப்பாக செயல்படுகிறார், இடது கை மற்றும் வலது கை என்று இருவகையான பேட்ஸ்மேன்களையும் எதிர்கொள்வதில் திறமையாக செயல்படுகிறார் என்று பாராட்டியிருப்பதும் குறிப்பிடத்தக்கது.

மேற்கு இந்திய அணிகளுக்கு இடையிலான போட்டியில் விளையாடிவரும் இந்திய அணி ஏற்கனவே முதல் டெஸ்ட் போட்டியில் வெற்றிப்பெற்ற நிலையில் தற்போது இரண்டாவது டெஸ்ட் போட்டியில் விளையாடி வருகின்றனர். நேற்றைய போட்டியில் யஷஸ்வி 57 ரன்களை எடுத்து ஆட்டமிழந்த நிலையில் இந்திய அணி 288 ரன்களை குவித்திருக்கிறது.

தென்னாப்பிரிக்கா அணியின் நட்சத்திர கிரிக்கெட் வீரரான ஏபி டிவில்லியர்ஸ் கடந்த 2018 இல் சர்வதேசக் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வுபெற்றார். இந்நிலையில் கிரிக்கெட் கணிப்புகளை அவ்வபோது வெளியிட்டு வரும் இவர் நான் கடைசி 5 வருடங்களில் மோசமான மனநிலைக்குத் தள்ளப்பட்டேன். காரணம் தூக்கம் வராமல் தவித்ததால் தொடர்ந்து தூக்க மாத்திரைகளை எடுத்துக்கொள்ள ஆரம்பித்தேன். இதுவே பெரிய பிரச்சனையாகி விட்டது. தூக்கம் வருவதற்கு பதிலாக மிகவும் நிதானமாக உணர்ந்து கடைசியில் உடல்நலம் பாதிக்கப்பட்டு ஊசி எடுத்துக்கொண்டேன்.

பல நெருக்கடிக்கு மத்தியில் கடைசி 5 வருடங்களில் சிறப்பாக செயல்பட்டு ஓய்வு பெற்றுவிட்டேன். என்னுடைய இந்த நிலைமையை நான் எனது பயிற்சியாளர், கேப்டன் என்று யாரிடமும் தெரிக்காமல் தடுமாறினேன். இளம் வீரர்கள் இதுபோன்று இல்லாமல் எல்லாவற்றையும் பயிற்சியாளர்களிடம் தெரிவித்து தக்க தீர்வுகளை காணுங்கள் என்று கூறியிருப்பது ரசிகர்களிடையே ஆச்சர்யத்தை ஏற்படுத்தி உள்ளது.

Source link

By Admin S

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *