கொரோனோ வைரஸ் பாதிப்பு கடந்த இரண்டு வருடங்களாக உலக நாடுகளையே புரட்டிப் போட்டுவிட்டது. இந்நிலையில் மோசமான சுவாச பிரச்சனையை ஏற்படுத்தும் மெர்ஸ் கொரோனா MERS-Co V வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளதாக உலகச் சுகாதார நிறுவனம் அறிக்கை வெளியிட்டு இருக்கிறது.

காய்ச்சல், இருமல் மற்றும் மோசமான சுவாச பிரச்சனையை ஏற்படுத்தும் மெர்ஸ் கொரோனா வைரஸ் பாதிப்பு கடந்த திங்கள் கிழமை அன்று அபுதாபியின் அல் ஐன் நகரில் கண்டறியப்பட்டதாக உலகச் சுகாதார நிறுவனம் தகவல் வெளியிட்டு இருக்கிறது. 28 வயதுடைய இளைஞர் ஒருவருக்கு இந்தப் பாதிப்பு கண்டறியப்பட்ட நிலையில் அவருடன் தொடர்புடைய 108 பேருக்கு பரிசோதனை நடத்தப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

பொதுவாக ட்ரோமெடரி ஒட்டகங்களிடம் இருந்து பரவுவதாகக் கருதப்படும் இந்த வைரஸ் கடந்த 2012 முதலே பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. காய்ச்சல், இருமலைத் தவிர நிமோனியா பாதிப்பை ஏற்படுத்துகிற இந்த வைரஸ் பாதிப்பால் இதுவரை 2,605 பேர் பாதிக்கப்பட்டு உள்ளதாகவும் அதில் 936 பேர் உயிரிழந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

மேலும் சவுதி அரேபியாவைத் தவிர அல்ஜீரியா, ஆஸ்திரியா, பஹ்ரைன், சீனா, எகிப்து, பிரான்ஸ், ஜெர்மனி, கிரீஸ், ஈரான், இத்தாலி, ஜோர்டான், குவைத், லெபனான், மலேசியா, நெதர்லாந்து, ஓமன், பிலிப்பைன்ஸ், கத்தார், கொரியா, பிரிட்டன், மற்றும் ஏமன் என்று 27 நாடுகளில் இந்த மெர்ஸ் கொரோனா வைரஸ் பாதிப்பு இதற்கு முன்பு கண்டறியப்பட்டு உள்ளது.

மேலும் உலகம் முழுவதும் பாதிப்பை ஏற்படுத்திய கொரோனா வைரஸ், பாதிக்கப்பட்ட 5% மக்களுக்கு மட்டுமே உயிரிழப்பை ஏற்படுத்தியது. ஆனால் இந்த மெர்ஸ் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 35% பேருக்கு உயிரிழப்பை ஏற்படுத்துவதால் ஆபத்தானதாகக் கருதப்படுகிறது. இந்நிலையில் தற்போது அபுதாபியில் மெர்ஸ் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ள 28 வயதுடைய இளைஞரின் தற்போதைய நிலை குறித்து எந்தவித தகவலும் வெளியிடப்படவில்லை.

இந்நிலையில் பாதிக்கப்பட்ட இளைஞருடன் நெருங்கிய தொடர்புடைய 108 பேரில் யாருக்கும் மெர்ஸ் கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்படவில்லை என்றும் கூறப்பட்டு இருக்கிறது. அதேநேரத்தில் ட்ரோமெடரி ஒட்டகங்களிடம் இந்த வகை வைரஸ் பாதிப்பு ஏற்படுவதாகக் கூறப்படும் நிலையில் பாதிக்கப்பட்ட 28 வயது இளைஞர் ஒட்டகங்களுடன் தொடர்பு கொண்டிருக்கவில்லை என்றும் இந்தப் பாதிப்பு அவருக்கு எப்படி வந்தது என்றே கண்டறிய முடியவில்லை என்றும் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் கூறப்படுகின்றன.

பொதுவாக மத்திய கிழக்கு நாடுகளில் பவரக்கூடிய இந்த MERS-Co V வைரஸ் விலங்கு மற்றும் மனிதர்களுக்கு இடையே பரவக்கூடிய ஒருவகை ஜுடோனிக் வகையைச் சார்ந்தது என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். இந்நிலையில் பாதுகாப்பற்ற முறையில் ஒட்டகம் போன்ற மிருகங்களிடம் மனிதர்கள் தொடர்பு கொள்வதால் பரவும் மெர்ஸ் கொரோனா வைரஸ் மேலும் அதிக பாதிப்பை ஏற்படுத்தி விடுமோ என்ற அச்சத்தை உலகச் சுகாதார நிறுவனம் வெளியிட்டு இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

Source link

By Admin S

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: