10 மற்றும் 12ஆம் வகுப்பு தேர்ச்சி பெறாத மாணவர்கள் உயர்கல்வி பயில தமிழக அரசு அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

அரசுப் பள்ளிகளில் பள்ளி மேலாண்மைக் குழு கூட்டம் இன்று மதியம் 3 மணிக்கு நடத்தப்பட வேண்டும் என்று பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் இயங்கிவரும் பள்ளி மேலாண்மைக் குழுக்கள் (எஸ்எம்சி), மறுகட்டமைப்பு செய்யப்பட்டது. அதன்படி, பெற்றோர், ஆசிரியர், உள்ளாட்சிப் பிரதிநிதி மற்றும் கல்வியாளர்களை உள்ளடக்கிய 20 உறுப்பினர்கள் கொண்ட குழுவாக எஸ்எம்சி மாற்றி அமைக்கப்பட்டது.

இந்த குழுவின் கூட்டம் இன்று மாலை 3 முதல் 4.30 மணி வரை நடைபெற உள்ளது. இதில் பள்ளி வளர்ச்சி, இடைநின்ற மாணவர்கள் கணக்கெடுப்பு, இல்லம் தேடி கல்வி, 10, 11, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு ஏற்பாடுகள், பிளஸ் 2 மாணவர்களின் உயர்கல்வி ஆலோசனை உட்பட பல்வேறு விஷயங்கள் குறித்து விவாதிக்கப்பட உள்ளது.

பத்தாம் வகுப்பில் தோல்வியடைந்த மாணவர்கள், எட்டாம் வகுப்பு தேர்ச்சி எனும் கல்வி தகுதியிலேயே ஐடிஐயில் சேர்ந்து படிக்கலாம். 12ஆம் வகுப்பில் தேர்ச்சி பெறாத மாணவர்கள் 10ஆம் வகுப்பு தேர்ச்சி எனும் கல்வி தகுதியில் பாலிடெக்னிக் டிப்ளமோ படிப்புகளில் சேரலாம்.

இந்த படிப்பு படித்தால் என்ன வேலை என்று தானே நினைக்கிறீர்கள், டிப்ளேமா மற்றும் ஐ.டி.ஐ. படித்தவர்களுக்கு இந்தியாவிலும், வெளிநாட்டிலும்  கைநிறைய சம்பளத்தோடு தொழில்துறையில் ஏராளமான வேலைவாய்ப்புகள் காத்து கிடக்கின்றன. இதனால் தோல்வி அடைந்துவிட்டோம் என எண்ணாமல் மன உறுதியுடன் மேற்படிப்பை படித்து நல்ல வேலையில் சேருங்கள்.

மேலும் தமிழக அரசு ஐடிஐ படிப்பவர்களிடம் எந்த கட்டணமும் வசூலிக்காது. லேப்டாப், சைக்கிள், பாடப்புத்தகங்கள், சீருடைகள் என அனைத்தையும் இலவசமாக வழங்குகிறது. இது போக மாணவர்களுக்கு மாதம் தோறும் ரூ.750 உதவிதொகையும் வழங்கப்படுகிறது. இதனால் உடனடியாக மாணவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளுங்கள்.

உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 46, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.

Source link

By Admin S

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *