இலங்கை அணி சரியான நேரத்தில் எழுச்சி பெற்றிருப்பதாக அந்த அணியின் கேப்டன் தசுன் ஷனகா கூறியுள்ளார். நாளை இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையே ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டியில் நடைபெற உள்ள நிலையில், இலங்கை அணியின் கேப்டன் பேட்டி அளித்துள்ளார். ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் கடந்த மாதம் 30 ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்தத் தொடரில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம், ஆப்கானிஸ்தான் மற்றும் நேபாளம் ஆகிய 6 அணிகள் பங்கேற்றன.

லீக் சுற்றில் நேபாளம் மற்றும் ஆப்கானிஸ்தான் அணி வெளியேற, அதைத் தொடர்ந்து நடைபெற்ற சூப்பர் 4 சுற்றில் பாகிஸ்தான் மற்றும் வங்கதேச அணிகள் வெளியேறின. இந்நிலையில் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் நாளை இறுதிப்போட்டி இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையே நடைபெற உள்ளது. கடைசியாக நடந்த சூப்பர் 4 மேட்சில் இந்திய அணி வங்கதேசத்திடம் அதிர்ச்சி தோல்வி அடைந்தது. அதே நேரம் கடைசி போட்டியில் பாகிஸ்தான் அணியை வீழ்த்திய உற்சாகத்துடன் இலங்கை அணி களம் காண உள்ளது.

இதன் காரணமாக நாளைய ஆட்டம் மிகவும் விறுவிறுப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் இலங்கை அணி கேப்டன் தசுன் ஷனகா அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது-

மிகச் சரியான நேரத்தில் இலங்கை அணி எழுச்சி பெற்றுள்ளது. நாட்டுக்கு பெருமை தேடித் தர எங்கள் அணியின் இளம் வீரர்கள் துடித்துக் கொண்டிருக்கின்றனர்.

இதையும் படிங்க – ‘இந்தியா அல்லது இங்கிலாந்துதான் உலகக்கோப்பையை வெல்லும்’ – குமார் சங்கக்கரா

எனது தலைமையில் இளம் அணியாக நாங்கள் இன்னும் மிகப்பெரிய கோப்பைகளை வெல்லவில்லை. எனவே நாளை நடைபெற உள்ள ஆட்டம் எங்களுக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. ஆசிய கோப்பையை வெல்லக்கூடிய தகுதியான அணி என்பதை இலங்கை வீரர்கள் உலகிற்கு காண்பிக்க வேண்டும்.

இதையும் படிங்க – Asia Cup Final : ஆசிய கோப்பை இறுதிப் போட்டியில் மழை குறுக்கிட வாய்ப்புள்ளதா?

இந்திய அணிக்கு எதிராக நாங்கள் தொடக்கத்திலேயே விக்கெட்டுகளை கைப்பற்ற வேண்டும். அப்படி செய்தால் ஆட்டத்தை எங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர அதிக வாய்ப்பு ஏற்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 46, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.

Source link

By Admin S

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *