அரியாங்குப்பம்,-மொபைல் போனில் ‘நெட்’ ரீசார்ஜ் செய்ய தாய் பணம் தராததால் விரக்தியடைந்த மாணவர் துாக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார.்
வீராம்பட்டிணம் நடுத்தெருவை சேர்ந்தவர் அருள் தாஸ் மனைவி பச்சைவள்ளி, 36; கணவரை இழந்த இவர் ஜவுளிகடையில் வேலை செய்து வருகிறார். இவரது மகன் கமலேஷ்,16; புதுச்சேரி வ.உ.சி., பள்ளியில் பிளஸ் 1 படித்து வந்தார். இவர், மொபைல் போனில் தனது நண்பர்களும் கேம் விளையாடுவதில் ஆர்வம் காட்டி வந்தார்.
இவரது மொபைல் போனில் நேற்று ‘நெட்’ தீர்ந்தது. அதனை
ரீ-சார்ஜ் செய்ய தனது தாயிடம் பணம் கேட் டார். அதற்கு அவர், மாலை வீட்டிற்கு வந்து பணம் தருவதாக கூறிவிட்டு வேலைக்கு சென்றார்.
போனில் நெட் ரீசார்ஜ் செய்ய முடியாததால், தனது நண்பர்களுடன் கேம் விளையாட முடியாத விரக்தியில் கமலேஷ், வீட்டில் துாக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
அரியாங்குப்பம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
