இந்தியா – இலங்கை அணிகள் மோதும் ஆசியக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் இறுதிப்போட்டி இலங்கையில் சற்று முன்பு தொடங்கியது.

ஆசியப் கோப்பை கிரிக்கெட் போட்டி இறுதிக் கட்டத்தை எட்டியிருக்கிறது. இந்நிலையில் இலங்கை கொழும்புவில் இன்று 3.30 மணிக்குத் தொடங்கியது இறுதிப் போட்டி. இதில் டாஸ் வென்ற இலங்கை அணி இந்தியாவுக்கு எதிராக பேட்டிங்கைத் தேர்வு செய்தது.
முதல் ஓவரை ஜஸ்ப்ரிட் பும்ரா வீச முதல் ஓவரிலேயே அவருக்கு ஒரு விக்கெட் கிடைத்தது. அதற்குப் பிறகு 2- வது ஓவரை வீசிய சிராஜ் ஒரு ரன்கள் கூட வழங்கவில்லை. இதையொட்டி மீண்டும் 4 -வது ஓவரை வீசிய சிராஜ்

அந்த ஓவரில் 4 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தியிருக்கிறார்.` W 0 W W 4 W’ என அந்த ஓவரில் விக்கெட் எடுத்த சிராஜ்,
முதல் பந்து: பதும் நிஷாங்கா விக்கெட்டை எடுத்தார்.
2- வது பந்து: ரன்கள் ஏதுமில்லை.
3- வது பந்து: சதிரா சமரவிக்ரமாவை எல்பிடபிள்யூ வாக்கினார்.
4-வது பந்து: சரித் அசலங்கா இசன் கிஷனிடம் கேட்ச் கொடுத்து விக்கெட்டை இழந்தார்.
5-வது பந்து : நான்கு ரன்கள்
6-வது பந்து: தனஞ்செயா -டி – சில்வா விக்கெட் கீப்பரான ராகுலிடம் கேட்ச் கொடுத்து விக்கெட்டை இழந்தார்.
இதன் மூலம் ஒரே ஓவரில் 4 விக்கெட்டுகளை விழ்த்திய இந்திய வீரர் என்ற சாதனையைப் பெற்றிருக்கிறார் முகமது சிராஜ். அதன் பிறகு தான் வீசிய 3 -வது ஓவரில் ஷனங்காவின் விக்கெட்டை வீழ்த்தியதன் மூலம் 5 விக்கெட்டுகளை வீழ்த்தியிருக்கிறார். மிக விரைவாக 5 விக்கெட்டுகளை வீழ்த்தியவர் என்ற சாதனையும் முகமது சிராஜ் வசம் வந்திருக்கிறது.