விஜயலட்சுமி எல்லாவற்றையும் பதிவுசெய்து வருகிறாரே, நான் பேசியதாக கூறுவதை ஏன் பதிவிடவில்லை… காம்ப்ரமைஸ், சமரசம் என்பது என்னுடைய சரித்திரத்திலேயே கிடையாது. அப்படி செய்ய வேண்டிய அவசியமும் கிடையாது. காவல்துறை எனக்கு ஆதரவாக என்ன வேலை செய்துள்ளது… 2011-ல் இந்த குற்றச்சாட்டை விஜயலட்சுமி கொடுத்தபோது, இன்று விசாரணைக்கு அழைக்கும் காவலர்கள், காவலர்களாக இருந்தார்களா… இல்லையா? அவர்களில் யாரும் இன்றைக்கு வேலைக்குச் சேர்ந்தவர்கள் இல்லையே!

அப்போது என்னை விசாரிக்காமல் என்ன செய்தனர்… என்மீதான குற்றச்சாட்டுகளுக்கு எந்த ஆதாரமும் கிடையாது. ஊடகங்களில் பணியாற்றுபவர்கள் பத்திரிகையாளர்கள்தானே தவிர பரமாத்மாக்கள் கிடையாது. நாகரிகமும் கண்ணியமும், எனக்கு மட்டுமல்ல கேள்வி கேட்பவர்களுக்கும் இருக்க வேண்டும். என் மீது அவதூறு கூறிய விஜயலட்சுமி, தனியார் தொலைக்காட்சி நெறியாளரையும் யாருமே கேட்கவில்லையே ஏன்… என்மீது வைக்கப்பட்டவை ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள்” என்று தெரிவித்தார்.