சென்னை போலீஸார் காரைக்கால் நீதிமன்றத்துக்குள் நுழைந்து, பெண்ணை அழைத்தச் செல்ல முயன்றபோது, அவர்களுடன் செல்ல மறுத்து கூச்சலிடவும், அங்கிருந்த வழக்கறிஞர்கள் `என்ன பிரச்னை?’ என கேட்டபோது, பிரியா விளக்கமாகக் கூறியுள்ளார். அதையடுத்து தமிழக போலீஸாரை தடுத்த காரைக்கால் வழக்கறிஞர்கள், `இருவரும் திருக்குவளையில் பதிவு திருமணம் செய்துகொண்ட நிலையில், அவர்களைப் பிரிக்க முடியாது’ எனக் கூறி, பதிவு திருமணம் குறித்த ஆவணங்களை அளித்ததையடுத்து, தமிழக போலீஸார் சென்னை திரும்பினர்.

மேலும் சென்னை போலீஸாருடன் வந்த பெண்ணின் உறவினர்கள், அவரின் கழுத்து, காதில் இருந்த தங்க நகைகள் மற்றும் செல்போனை நடுரோட்டிலேயே அவரிடமிருந்து பெற்றுச் சென்றனர். காதல் திருமணம் செய்துகொண்ட இளம்ஜோடிக்கு நிரவி காவல் நிலையத்தில் பாதுகாப்பு வழங்கப்படாத நிலையில், காரைக்கால் மாவட்ட நீதிமன்றத்தில் தஞ்சம் புகுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.