மேலும் பேசியவர், “அ.தி.மு.க-வில் பல அணிகள் இருக்கின்றன. ஓ.பி.ஸ் அணி, இ.பி.ஸ் அணி, தீபா அணி, தீபா டிரைவர் அணி, இன்றைக்குக்கூட ஒருவர் கிளம்பியுள்ளார் “நான்தான் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் உண்மையான மகள்’ என்று. விரைவில் அவர்தான் அ.தி.மு.க-வைப் பிடிக்கப்போவதாக வேறு கூறியுள்ளார். இதையெல்லாம் தாண்டி அ.தி.மு.க-வில் இன்னொரு அணி உள்ளது. அது பா.ஜ.க அணி. எனவே, மணமக்கள் இருவரும் திருமணத்திற்குப் பிறகு மாமியார் அணி, நாத்தனார் அணி எனப் பிரிந்து நிற்காமல், ஒற்றுமையோடு, நம்முடைய இந்தியா கூட்டணி போல் வெற்றி அணியாக இருக்கவேண்டும்” என்று கூறினார்.