புதுடில்லி: டில்லி மெட்ரோ திறப்பு விழாவிற்கு, மூன்று முறை தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வர் கெஜ்ரிவாலுக்கு அழைப்பு இல்லை என ஆம் ஆத்மி குற்றம் சாட்டி உள்ளது.
டில்லி மெட்ரோவின் துவாரகா செக்டார் – 21 முதல் யஷோபூமி துவாரகா செக்டார் – 25 வரையிலான விமான நிலைய விரைவு வழித்தட சேவையின் நீட்டிப்பை பிரதமா் நரேந்திர மோடி இன்று(செப்.17) துவக்கி வைத்தார். மெட்ரோ ஊழியர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி உரையாடி மகிழ்ந்தார். பின்னர் அவர், டில்லி மெட்ரோவில் பயணம் செய்தார். இந்நிலையில், டில்லி மெட்ரோ திறப்பு விழாவிற்கு, மூன்று முறை தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வர் கெஜ்ரிவாலுக்கு அழைப்பு வில்லை என ஆம் ஆத்மி குற்றம் சாட்டி உள்ளது.
இது குறித்து, ஆம் ஆத்மி அமைச்சர் சவுரப் பரத்வாஜ் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: உலக தலைவர்கள் முன்னிலையில் பிரதமர் மோடி ஒரு வாரத்திற்கு முன்பு ‘வசுதைவ குடும்பம்’ அதாவது உலகம் ஒரு குடும்பம் என பேசினார். இப்போது மூன்று முறை தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வர் கெஜ்ரிவாலுக்கு மெட்ரோ திறப்பு விழாவிற்கு அழைக்கவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
