இந்தியாவின் பல கிராமங்கள் மற்றும் சிறு நகரங்களில் இன்றும் உள்ளூர் சிறு தெய்வங்களையும் வன தெய்வங்களையும் பக்தியோடு மக்கள் வணங்கி வருகிறார்கள். இந்த தெய்வங்களுக்கென்று தனியாக கோயில்கள் கூட உள்ளன. இதேபோல் கர்நாடகாவின் பல கிராமங்களிலும் இறந்துபோன மனிதர் ஒருவரை கடவுளுக்கும் மேலாக வணங்கி வருகிறார்கள். அவருக்கென்று கோயில்களையும் அமைத்துள்ளார்கள். அவர் வேறு யாருமல்ல; வனப் பாதுகாப்பில் தனி முத்திரை பதித்த இந்திய வனத்துறை அதிகாரியான பாண்டிலப்பள்ளி ஸ்ரீநிவாஸ் தான் அந்த மாமனிதர்.

1991-ம் ஆண்டு காவல் பணியில் இருக்கும் போதே, சந்தனக் கடத்தல் வீரப்பனால் கொல்லப்பட்டு வீர மரணம் அடைந்தார் பி ஸ்ரீநிவாஸ். தான் பணி புரிந்த காலத்தில் பல கிராமங்களுக்கு சாலை வசதிகளையும், தாழ்த்தப்பட்ட மக்களுக்கு மருத்துவ வசதிகளையும், பழங்குடியினர் வசிக்கும் பகுதிகளுக்கு குடிநீர் வசதிகளையும் ஏற்படுத்தி கொடுத்துள்ளார். தன்னுடைய சொந்த பணத்தில் 40 ஏழை குடும்பங்களுக்கு வீடுகட்டி கொடுத்துள்ளார்.

இப்படி கிராம மக்களுக்கு ஸ்ரீநிவாஸ் செய்த உதவிகளை சொல்லிக்கொண்டே போகலாம். கடினமான சமயத்தில் கிராம மக்களுக்கு கடவுளாகவே தெரிந்தார் ஸ்ரீநிவாஸ். அதனால்தான் அவரை தங்கள் தெய்வமாகவே வணங்குகிறார்கள் கிராமத்தினர்.

ஸ்ரீநிவாஸ் பிறந்தது வளர்ந்தது எல்லாமே ஆந்திராவில்தான். தமிழக-கர்நாடக எல்லையில் அமைந்துள்ள காட்டுப் பகுதியில் வீரப்பன் கோலோச்சுக் கொண்டிருந்த சமயத்தில்தான் இந்திய வனத்துறை அதிகாரியாக கர்நாடகாவிற்கு வந்தார் ஸ்ரீநிவாஸ். கோபிநத்தம் கிராமத்தில் அதிகாரியாக இருந்த போது வீரப்பனுக்கும் ஸ்ரீநிவாசிற்கும் இடையே அடிக்கடி மோதல் உண்டானது.

கோபிநத்தம் கிராமத்தில் மாரியம்மன் கோவில் கட்டுவதற்கு பெரிதும் உதவியாக இருந்தார் ஸ்ரீநிவாஸ். கோவில் கட்டுவதற்கும் அதில் வேலை செய்பவர்களுக்கு சம்பளம் தரவும் ஃபிக்ஸட் டெபாசிட் திட்டம் ஒன்று ஸ்ரீநிவாசின் ஆலோசனையின் பேரில் தொடங்கப்பட்டது. இது வீரப்பனுக்கு ஆத்திரத்தை உண்டாக்கியது என்றே சொல்லலாம். கோபிநத்தம் கிராமம் கொஞ்சம் கொஞ்சமாக தன் கட்டுப்பாட்டில் இருந்து விலகுவதை உணர்ந்த வீரப்பன் கோபத்தின் உச்சிக்கே சென்றான்.

இதற்கிடையில் வீரப்பன் சரணடைய உள்ளதாகவும் அதற்கு அதிகாரி ஸ்ரீநிவாஸ் எந்த ஆயுதமும் இல்லாமல் தனியாக காட்டுப் பகுதிக்கு வர வேண்டும் என்றும் போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு நவம்பர் 9, 1991 அன்று தகவல் வந்தது. அன்றிரவே எந்தவித தயக்கமும் இன்றி காட்டிற்கு கிளம்ப தயாரானார் ஸ்ரீநிவாஸ். “நல்லதே நடக்கும் என நினைக்கிறோம். கடவுள் நமக்கு உதவி செய்வார்” என்பதே அவரிடமிருந்து வந்த கடைசி செய்தி.

தன்னந்தனியாக காட்டிற்குள் வந்த ஸ்ரீநிவாஸை ஈவிரக்கமின்றி சுட்டுக் கொன்றது வீரப்பன் கும்பல். சுட்டதோடு நிற்காமல் அவரது தலையை துண்டாக வெட்டி எடுத்துச் சென்ற வீரப்பன், மீதமுள்ள உடல் பாகத்தை நெருப்பிட்டு கொளுத்தினான். ஸ்ரீநிவாஸ் இறந்தபோது அவருக்கு வயது 37.

கோபிநத்தம் கிராமத்தில் எந்தக் கோயிலை கட்ட உதவினாரோ, அதேக் கோயிலின் நுழைவாயிலில் ஸ்ரீநிவாஸின் சிலை நிறுவப்பட்டுள்ளது. ஒவ்வொரு வருடமும் அவரது பிறந்தநாளான செப்டம்பர் 12 அன்று, இவரது சிலைக்கு பூஜையும் படையலும் செய்யப்பட்டு தெய்வமாக மக்கள் வணங்குகிறார்கள்.

அரிய வகை நாணயங்கள்… செய்தித் தாள் தொகுப்பு… நெல்லையில் கருணாநிதி நூற்றாண்டு சிறப்பு கண்காட்சி

இதே சடங்கை வேறு சில கிராமத்தினரும் பின்பற்றுகிறார்கள். இப்படிதான் இன்றுவரை கர்நாடகாவின் பல கிராமங்களிலும் தெய்வமாக வாழ்ந்து வருகிறார் வனத்துறை அதிகாரி பி ஸ்ரீநிவாஸ்.

உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 46, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.

Source link

By Admin S

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: