ஐதராபாத்: ஐதராபாத் கடந்த 1948 ம் ஆண்டு செப்., 17 அன்று இந்தியாவுடன் இணைந்தது. ஐதராபாத் விடுதலை தினமான இன்று கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: ஐதராபாத் மக்கள் அனைவருக்கும் ஐதராபாத் விடுதலை தின வாழ்த்துக்கள். இந்த நாள் ஐதராபாத் மக்களின் அசைக்க முடியாத தேசபக்திக்கும், தீய ஆட்சியில் இருந்தும் மற்றும் நிஜாமின் அடக்குமுறையில் இருந்து விடுதலை பெற ஐதராபாத் மக்களின் இடைவிடாத போராட்டத்திற்கும் ஒரு சான்றாகும் எனக்கூறியுள்ளார்.
முன்னதாக, ஐதராபாத்தில் உள்ள பரேட் மைதானத்தில் பாதுகாப்பு படையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்ட அமித்ஷா தேசியக் கொடியை ஏற்றி வைத்தார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
