அமெரிக்கா குத்துச்சண்டை தொலைக்காட்சி நிகழ்ச்சியான WWE மூலம் உலகம் முழுவதும் பிரபலமானவர் ஹல்க் ஹோகன். தனது குத்துச் சண்டை திறமையால் உலகம் முழுக்கவே கோடிக்கணக்கான ரசிகர்களைப் பெற்றுள்ள இவர் தற்போது 3 ஆவதாகத் திருமணம் செய்து கொள்ள இருப்பதாகத் தகவல் வெளியிட்டுள்ளார்.

இளைஞர்களிடையே அதிக வரவேற்பை பெற்றிருக்கும் குத்துச்சண்டை நிகழ்ச்சியான WWE நிகழ்ச்சி மூலம் உலக அளவில் பிரபலமானவர் ஹல்க் ஹோகன். 80-90 களில் இவருடைய நிகழ்ச்சிக்கு ரசிகர்களிடையே பெரிய வரவேற்பு இருந்து வந்தது. சர்வதேச குத்துச்சண்டை போட்டிகளில் 5 முறை சாம்பியன் ஷிப் பட்டம் பெற்றுள்ளார். மேலும் பிட்னஸ், பளுதூக்கும் போட்டிகளுக்காகவும் பலமுறை வெற்றிக்கோப்பைகளை பெற்றவர்.

தற்போது 69 வயதாகும் ஹல்க் ஹோகன் யோகா பயிற்சியாளரான ஸ்கை டெய்லி என்பவரை திருமணம் செய்து கொள்ள இருப்பதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளார். ஏற்கனவே இரு முறை விவகாரத்து செய்து கொண்ட ஹல்க் 45 வயதான யோகா பயிற்சியாளர் ஸ்கை டெய்லியுடன் கடந்த ஒரு வருடமாக டேட்டிங் செய்து வருவதாகவும் கடந்த சில வாரங்களுக்கு முன்பு அவருடன் நிச்சயதார்த்தம் செய்து கொண்டதாகவும் இதையடுத்து விரைவில் திருமணம் செய்து கொள்ள இருப்பதாகவும் கூறியுள்ளார்.

குத்துச்சண்டை பிரபலமான ஹல்க் ஹோகன் கடந்த 1983 இல் லிண்டா கிளாரிட்ஜ் என்பவரை திருமணம் செய்து கொண்டு அவருடன் 26 வருடங்கள் வாழ்ந்துள்ளார். இந்தத் தம்பதிகளுக்கு நிக் (32), புரூக் (35) என்று இரு குழந்தைகள் இருந்த நிலையில் கடந்த 2009 இல் விவாகரத்துப் பெற்றார். பின்பு 2010 இல் ஜெனிபர் மெக்டேனியல் என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்ட இவர் 2021 இல் தனது 11 வருட திருமண வாழ்க்கையை முறித்துக்கொண்டார். மேலும் இந்த முறிவுக்கு பரிசாக விலையுயர்ந்த கார் ஒன்றை தனது மனைவிக்கு பரிசளித்து இருந்ததும் குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் 69 வயதான ஹல்க் யோகா, பளூதூக்கும் போட்டிகள் மற்றும் பிட்னஸ் விஷயங்களில் கவனம் செலுத்திவரும் நிலையில் கடந்த ஒருவருடத்திற்கு முன்பு புளோரிடாவிலுள்ள பிரபல உணவகம் ஒன்றில் ஸ்கை டெய்லியை சந்தித்து தனது காதலை வெளிப்படுத்திய நிலையில் தற்போது நிச்சயதார்த்தம் செய்து கொண்டுள்ளதாகக் கூறப்படுகிறது. விரைவில் திருமணம் நடக்க இருக்கும் நிலையில் ஸ்கை டெய்லிக்கு ஏற்கனவே நடந்த திருமணத்தின் மூலம் 3 குழந்தைகள் இருக்கும் நிலையில் நான் என்னுடைய குழந்தைகளுக்காக அதிகம் யோசித்தேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

குத்துச்சண்டை திறமைக்காக உலகம் முழுவதும் ரசிகர்களிடையே பெரிய வரவேற்பை பெற்றிருக்கும் ஹல்க் ஹோகன் 69 வயதில் 3 ஆவதாகத் திருமணம் செய்துகொள்ள இருக்கும் நிலையில் அவருக்கு ரசிகர்கள் பலரும் வாழ்த்துகளை பகிர்ந்து கொண்டு வருகின்றனர்.
 

Source link

By Admin S

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *