வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி: பார்லி., சிறப்பு கூட்டம் நாளை நடக்கவுள்ள நிலையில் புதிய பார்லி., வளாகத்தில் இன்று ராஜ்யசபா தலைவர் ஜக்தீப்தன்கர் தேசிய கொடியேற்றினார். விழாவில் லோக்சபா சபாநாயகர் ஓம்பிர்லா. மத்திய அமைச்சர்கள். பா.ஜ., காங்., உள்ளிட்ட எம்பிக்களும் பங்கேற்றனர்.
ரூ. 1,250 கோடி செலவில் கட்டி முடிக்கப்பட்ட புதிய கட்டடம் கடந்த சில மாதங்களுக்கு முன்னனர் திறந்து வைக்கப்பட்டது.
64 ஆயிரத்து, 500 சதுர மீட்டர் பரப்பளவில் கட்டப்படவுள்ள புதிய பார்லி., கட்டடத்தை, குஜராத்தை சேர்ந்த நிறுவனம் கட்டி முடித்தது.
பார்லி., வளாக திறப்பு விழாவில் நாடு முழுவதும் உள்ள மடாதிபதிகள் வரழைக்கப்பட்டு கவுரவிக்கப்பட்டனர். தமிழகத்தின் திருவாவடுதுறை ஆதீன செங்கோல் நிறுவப்பட்டது.
பார்லி., சிறப்பு கூட்டம் நாளை (செப்.18 ) முதல் துவங்கி 5 நாட்கள் நடக்கிறது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement