புதுச்சேரி,-வில்லியனுார் ஆச்சாரியா பொறியியல் தொழில்நுட்பக் கல்லுாரியில் பொறியாளர்கள் தின விழா கொண்டாடப்பட்டது.
ஆச்சாரியா கல்விக் குழும நிர்வாக இயக்குநர் அரவிந்தன் வழிகாட்டுதல்படி நடந்த விழாவிற்கு, கல்லூரி முதல்வர் குருலிங்கம் தலைமை தாங்கினார். மாணவர் பிரஷாந்த் வரவேற்றார்.
சிறப்பு விருந்தினராக பங்கேற்ற கல்லுாரியின் முன்னாள் மாணவரான விஸ்டம் கன்சல்டன்சி நிறுவன மேலாண் இயக்குநர் மணிகண்ணன், நவீன அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சி குறித்து கலந்துரையாடி, மாணவர்களின் சந்தேகங்களுக்கு விளக்கம் அளித்தார்.
இ.சி.இ., மாணவர்கள் உருவாக்கிய ‘ரோபோ டியான்’ மற்றும் இ.இ.இ., மாணவர்கள் உருவாக்கிய சந்திரயான்–3 மாடல் அறிமுகப்படுத்தி செயல் விளக்கம் காண்பிக்கப்பட்டது.
அறிவியல் மற்றும் மனித நேய துறை பேராசிரியர் ஷண்முகபிரியா, முதலாம் ஆண்டு மாணவி கிருத்திகா தொகுத்து வழங்கினர்.
விழா ஏற்பாடுகளை துறை தலைவர் சியாமளா கவுரி, சிவில் இன்ஜினியரிங் துறை தலைவர் ராஜேந்திர பிரசாத் தலைமையில் அனைத்து துறைத் தலைவர்கள், பேராசிரியர்கள் செய்திருந்தனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
