ஒரு சின்ன கதையுடன் தொடங்கலாம். 2016 ஆம் ஆண்டில், முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தனது சம்பளமான 400,000 டாலர்களை வாங்க மறுத்த கதை யாருக்காவது தெரியுமா? அவர் அதற்கு பதிலாக, தனது சம்பளமாக 1 டாலர் மட்டுமே வாங்க முடிவு செய்தார். இந்த நிலையில் உலகத் தலைவர்களின் சம்பளம் வானளவு உயர்ந்துள்ளதை உங்களால் புரிந்து கொள்ள முடியும் என்று நம்புகிறோம். இவர்களுக்கு சம்பளம் தவிர பிற மேம்பட்ட சலுகைகளும் வசதிகளும் வழங்கப்படுகின்றன. எனவே உலக அரசியல் தலைவர்களின் ஊதியம் குறித்து சுவாரஸ்யமான தகவல்கள் வெளியாகி உள்ளன. உலக மக்கள் தொகை மதிப்பாய்வு வெளியிட்ட அறிக்கையின்படி, அதிக சம்பளம் வாங்கும் உலகத் தலைவர்களின் பட்டியலை காண்போம். இப்போது சிலர் மனதில் அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்குதான் அதிக சம்பளம் இருக்கும் என்ற எண்ணம் தோன்றும். ஆனால் உண்மை நிலவரம் கீழே தொகுக்கப்பட்டுள்ளது.