இணையத்தை அடிப்படையாக கொண்டு ஸ்மார்ட்போன் பயன்பாடும், அதன் வழியாக வங்கி சார்ந்த பணப்பரிமாற்றங்கள், இணையதள வர்த்தகம் உள்ளிட்டவை இந்தியாவில் அதிவேகமாக வளர்ந்து வருகின்றன.
டிஜிட்டல் இந்தியா வேகமெடுத்துள்ள நிலையில், பல்வேறு நாடுகளில் இருந்து இந்தியா மீது ‘சைபர் அட்டாக்’ நடந்து வருகின்றது. குறிப்பாக, பங்களாதேஷின் மைஸ்ட்டீரியஸ் டீம், இந்தோனேசியாவின் ஹாக்விஸ்ட், ஜாவா திமுர் சைபர் டீம், சைபர் எர்ரர் சிஸ்டம், ஜாம்பி சைபர் டீம், கனாக் டீம் உள்ளிட்டவை பெரிய அளவில் இந்தியாவில் ‘சைபர் அட்டாக்’ தொடுத்து வருகின்றன.
இதனையடுத்து புதுச்சேரி அரசு துறைகள் உஷாராக இருக்க வேண்டும் என தகவல் தொழில்நுட்ப துறை சுற்றறிக்கை வாயிலாக அனைத்து அரசு துறைகளுக்கும் எச்சரித்துள்ளது.
ஐ.டி., துறையினர் கூறுகையில், எந்தளவிற்கு இணையத் தொழில்நுட்பமும், இணையதளப் பயன்பாடும் முன்னேறி இருக்கிறதோ, அந்த அளவுக்கு அவற்றை தாக்கி அழிக்கும் வல்லமை படைத்த நாசகார சைபர் தொழில்நுட்பங்களும் வளர்ந்துள்ளன.
‘சைபர் அட்டாக்’ கை கவனிக்காவிட்டால், கம்ப்யூட்டர் மற்றும் லேப்டாப்பில் நம்மை அறியாமலேயே தரவுகளை இறக்க முடியும். அரசு தகவல்களை திருட முடியும். நீங்கள் அறியாமலேயே உங்கள் கணினியில் உங்களை உளவு பார்க்கும் செயலியை நிறுவி உங்கள் படுக்கை அறை வரை சென்று உங்கள் நடவடிக்கைகளை ரகசியமாக ஆராய முடியும். எனவே அரசு துறைகளை உஷார்படுத்தப்பட்டுள்ளன என்றனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
