போபால் :சனாதன தர்மம் குறித்து தி.மு.க., விமர்சித்து வருவது குறித்து, எதிர்க்கட்சிகளின், ‘இண்டியா’ கூட்டணியில் உள்ள காங்., உள்ளிட்ட கட்சிகள் மவுனமாக உள்ளன. நாடு முழுதும் மக்களிடையே இந்த விவகாரம் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், மத்திய பிரதேசத்தில் நடத்த திட்டமிட்டிருந்த பொதுக்கூட்டத்தை ரத்து செய்வதாக
காங்கிரஸ் நேற்று அறிவித்துள்ளது. இது, இண்டியா கூட்டணியில் முட்டல் துவங்கியுள்ளதற்கான அறிகுறியாக பார்க்கப்படுகிறது.லோக்சபாவுக்கு அடுத்தாண்டு ஏப்., – மே மாதங்களில் தேர்தல் நடக்க உள்ளது. மத்தியில் ஆளும் பா.ஜ.,வுக்கு எதிரான, 28 கட்சிகள் இணைந்து, இண்டியா என்ற பெயரில் கூட்டணியை அமைந்து
உள்ளன.
இதில், காங்கிரஸ், தி.மு.க., திரிணமுல் காங்., தேசியவாத காங்., கம்யூனிஸ்ட் கட்சிகள் உள்ளிட்டவை இடம்பெற்றுள்ளன.
இதுவரை மூன்று கூட்டங்கள் நடத்தப்பட்டுள்ளன. மேலும், 14 பேர் அடங்கிய ஒருங்கிணைப்பு குழுவின் முதல் கூட்டமும் சமீபத்தில் நடந்தது.
லோக்சபா தேர்தலுக்கான தொகுதி பங்கீடு தொடர்பாக, கூட்டணியில் உள்ள கட்சிகள் விவாதித்து வருகின்றன. ஒருமித்த கருத்து இல்லாதது போன்ற காரணங்களால், சில மாநிலங்களில் கூட்டணியாக இணைந்து போட்டியிடுவதில் சில கட்சிகளுக்குள் சிக்கல், நெருடல் ஏற்பட்டுள்ளது.

புதுடில்லியில் சமீபத்தில் நடந்த ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில், மத்திய அரசுக்கு எதிராக, நாடு முழுதும் கூட்டாக இணைந்து போராட்டமும், பொதுக் கூட்டமும் நடத்த திட்டமிடப்பட்டது.
இதன்படி, முதல் பொதுக் கூட்டம் விரைவில் சட்டசபை தேர்தல் நடக்க உள்ள மத்திய பிரதேசத்தின் போபாலில் அடுத்த மாத துவக்கத்தில் நடத்துவது என, முடிவு எடுக்கப்பட்டது.
இதற்கிடையே, கூட்டணியில் இடம்பெற்றுள்ள தி.மு.க.,வைச் சேர்ந்த, தமிழக முதல்வர் ஸ்டாலினின் மகனும், அமைச்சருமான உதயநிதி, சனாதன தர்மம் தொடர்பாக
விமர்சித்தார்.
இது நாடு முழுதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரத்தில், தி.மு.க., மற்றும் இண்டியா கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சியை, பா.ஜ., கடுமையாக விமர்சித்து வருகிறது.மத்திய பிரதேசம், ராஜஸ்தான் உட்பட ஐந்து மாநில சட்டசபைகளுக்கு இந்தாண்டு இறுதியில் தேர்தல் நடக்க உள்ளது. தி.மு.க.,வின் இந்த சனாதன தர்மம் தொடர்பான பேச்சு, காங்கிரஸ் கட்சிக்கு அந்த மாநிலங்களில் பெரும் பின்னடைவை ஏற்படுத்தும் என்று பரவலாக கூறப்
படுகிறது.

இந்நிலையில், மத்திய பிரதேச முன்னாள் முதல்வரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான கமல்நாத், போபாலில் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தபோது, ”போபாலில் நடத்த திட்டமிட்டிருந்த பொதுக் கூட்டம் நடக்காது. அது ரத்து செய்யப்பட்டுள்ளது,” என, கூறினார்.
கட்சியின் மற்றொரு மூத்த தலைவரும், பொதுச் செயலருமான, ரன்தீப் சிங் சுர்ஜேவாலா, ”போபால் கூட்டத்தில் பங்கேற்பது தொடர்பாக கட்சித் தலைமை எந்த முடிவையும் எடுக்கவில்லை. முடிவு எடுத்தவுடன் அது குறித்து தெரிவிக்கப்படும்,” என, தெரிவித்தார்.
போபாலில் பொதுக் கூட்டம் நடத்துவது தொடர்பாக, கூட்டணியில் உள்ள அனைத்துக் கட்சிகளும் இணைந்தே முடிவை எடுத்தன.
இந்நிலையில், காங்கிரசின் இந்த அறிவிப்பு, இண்டியா கூட்டணியில் புதிய சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.இது குறித்து, பா.ஜ.,வைச் சேர்ந்த மத்திய பிரதேச முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான் நேற்று கூறியுள்ளதாவது:
சனாதன தர்மத்தை டெங்கு, மலேரியா, கொசுவுடன் ஒப்பிட்டு, இண்டியா கூட்டணியில் உள்ள தி.மு.க., பேசியுள்ளது.இதை மத்திய பிரதேசம் உட்பட நாடு முழுதும் உள்ள மக்கள் சகித்து கொள்ள மாட்டார்கள். தங்களுடைய நம்பிக்கை மீது தாக்குதல் நடத்தப்படுவதை மக்கள் ஏற்க மாட்டர்.
மக்களின் கோபமே, தற்போது பொதுக் கூட்டத்தை ரத்து செய்ய வைத்துள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.

காங்கிரஸ் ஆலோசனை!

காங்கிரஸ் தலைவராக மல்லிகார்ஜுன கார்கே, கடந்தாண்டு பதவியேற்றார். அதைத் தொடர்ந்து, கட்சியின் முக்கிய முடிவுகளை எடுக்கும் செயற்குழு மாற்றியமைக்கப்பட்டது. இந்த புதிய செயற்குழுவின் கூட்டம், தெலுங்கானாவின்
தலைவர் ஹைதராபாதில் நேற்று துவங்கியது. இதில் கார்கே, முன்னாள் தலைவர்கள் சோனியா, ராகுல், பொதுச் செயலர் பிரியங்கா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
லோக்சபா தேர்தல் மற்றும் விரைவில் ஐந்து மாநில சட்டசபைகளுக்கு நடக்க உள்ள தேர்தலை எதிர்கொள்வது குறித்து இந்தக் கூட்டத்தில் விவாதித்தனர்.
செயற்குழு உறுப்பினர்களுடன், கட்சியின் மாநிலத் தலைவர்கள், சட்டசபைகளின் தலைவர்கள், பார்லிமென்ட் குழு நிர்வாகிகள், மத்திய தேர்தல் குழு உறுப்பினர்கள் உள்ளிட்டோர் பங்கேற்கும் ஆய்வுக் கூட்டம், இன்றும், நாளையும் நடக்க உள்ளது.
எம்.பி.,க்கள் மட்டும் புதுடில்லியில் நாளை துவங்கும் பார்லிமென்ட் சிறப்புக் கூட்டத் தொடரில் பங்கேற்பர். மற்றவர்கள், ஹைதராபாதில் கூடி ஆலோசனையில் ஈடுபட உள்ளனர்.

தீர்மானம் நிறைவேற்றம்

காங்கிரஸ் செயற்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் : அரசியலமைப்பு சட்டத்தின் மீது மோடி அரசு நடத்திய தாக்குதலை கண்டிக்கவும், எதிர்க்கவும் அனைத்து ஜனநாயக சக்திகளை திரட்ட முடிவு.

* எஸ்.சி., – எஸ்.டி., மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீட்டில் உச்ச வரம்பை அதிகரிக்க வேண்டும்

* கூட்டாட்சி கொள்கைகளின் தத்துவத்தை பா.ஜ., அரசு அழித்துவிட்டது

* இண்டியா கூட்டமைப்பின் வளர்ச்சி, பா.ஜ.,வை அச்சுறுத்தியுள்ளது

* சாதி, மதம், பணக்காரர், ஏழை, சிறியவர், பெரியவர் என பாகுபாடின்றி, நாட்டின் ஒவ்வொரு குடிமகனும் பெருமைப்படக் கூடிய தேசத்தை மீட்டெடுக்க உறுதி

* அரசியல், பொருளாதார மற்றும் பாதுகாப்பு அச்சுறுத்தல்களில் ஏற்பட்ட தோல்விக்கு மோடி அரசு பொறுப்பேற்க வேண்டும்

* மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை பார்லி., சிறப்புக் கூட்டத்தொடரில் நிறைவேற்ற வேண்டும்

எனக்கு தெரியாது!

குறிப்பிட்ட சில பத்திரிகையாளர்களின் நிகழ்ச்சிகளை புறக்கணிப்பதாக, இண்டியா கூட்டணியில் உள்ள கட்சிகள் முடிவெடுத்துள்ளன. அந்தக் கூட்டணியில் உள்ள எனக்கு இது பற்றி எதுவும் தெரியாது. நான் பத்திரிகையாளர்களை மதிப்பவன்.
நிதீஷ் குமார்பீஹார் முதல்வர், ஐக்கிய ஜனதா தளம்


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Source link

By Admin S

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: