வெற்றிலைக்கு ஊடகத்தன்மை அதிகம் உள்ளது என்கிறார்கள். எண்ணங்களையும் சக்தி அலைகளையும் அவை எளிதில் கடத்த வல்லவை. அதனாலேயே வெற்றிலையை வைத்து மை போட்டு பார்க்கும் வழக்கம் இருந்தது. தொலைந்து போன நபர், பொருள்களை வெற்றிலையில் மை போட்டு பார்க்கும் வழக்கம் இன்றும் கிராமங்களில் உள்ளது.

வெற்றிலையில் மை தடவி அஞ்சனா தேவி மந்திரத்தை 1008 முறை சொன்னால் தொலைவில் நடக்க இருப்பதை பார்க்க முடியும் என சித்தர்கள் கூறியுள்ளனர். வெற்றிலையில் சில அபூர்வ மூலிகைகளால் உருவான மை தடவி குறிப்பிட்டவர்களை வசியம் செய்ய முடியும் என்ற வழக்கமும் முன்னொரு காலத்தில் இருந்தது உண்டாம்.
வெற்றிலைகளை அடுக்கி, அதில் ஒன்றைத் தேர்ந்தெடுத்து, தேர்ந்தெடுத்தவரின் ஜாதகத்தையும் விதியையும் சொல்லி எழுதித் தந்த அருமையான ஜோதிடர்கள் கூட அந்த காலத்தில் இருந்திருக்கிறார்கள்.
இன்றும் வெற்றிலையில் பிரஸ்னம் பார்ப்பவர்கள் உண்டு. வெற்றிலையின் காம்புப் பகுதியைக் கொண்டே அந்த வெற்றிலையின் தன்மை, குணம் கூறிவிடலாம் என்பார்கள்.