
அயோத்தியாபட்டினம் அருள்மிகு கோதண்டராமசாமி கோயிலின் புதிய தேர் வெள்ளோட்டம் விழா
சேலம்: சேலம் அயோத்தியாபட்டினம் அருள்மிகு கோதண்டராமசாமி கோயிலின் புதிய தேர் வெள்ளோட்டம் விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. தேரை ஆயிரக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனா்.
சேலம் மாவட்டம், அயோத்தியாபட்டினம் அருகே ஆயிரம் ஆண்டுகள் பழமையான அருள்மிகு கோதண்ட ராமசாமி திருக்கோயில் தேர் திருவிழா பல ஆண்டுகளாக நடைபெற்று வந்தது.
இந்த நிலையில் ஏற்கனவே இருந்த தேர் பழுதானதால் கடந்த 60 ஆண்டுகளாக தேர் திருவிழா நடத்தப்படாமல் இருந்தது.
இதையும் படிக்க | நடராஜர் கோயிலுக்கு புதிய யானை: தீட்சிதர்கள் சார்பில் கஜபூஜை
இதையடுத்து இந்து சமய அறநிலைத்துறை சார்பில் புதிய செப்பனிடப்பட்டது. தொடர்ந்து அறுபது ஆண்டுகளுக்குப் பிறகு ஞாயிற்றுக்கழமை திருதேர் வெள்ளோட்ட விழா நடைபெற்றது
இந்த திருதேர் வெள்ளோட்ட விழாவில் அந்த பகுதியைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோவிந்தா, கோவிந்தா என்ற பக்தி முழக்கத்துடன் தேரை பக்தா்கள் வடம் பிடித்து இழுத்தனா்.